Monday, June 13, 2016

Marketing Basics - மார்கெட்டிங் அடிப்படை விளக்கம்.

 
இது வரை நம்ம blog ல பிசினஸ் பற்றி, எப்படி தொழில் கடன் வாங்குவது, பிசின்ஸ் ப்ளான் எப்படி தயாரிப்பது, தொழிலில் நஷ்டமடைவதற்கான முக்கிய காரணங்கள் என ஒரளவுக்கு பார்த்திருபோம். இப்ப அடுத்ததா மார்கெட்டிங் பற்றி பார்க்கலாம்.

Sunday, June 12, 2016

வியாபாரமுறைகள் பகுதி – 3

 

3.Franchising
ஃப்ரான்சைஸ் என்பது இருவேறு தரப்பினர்களுக்கான ஓர் ஒப்பந்தம் என கூறலாம். அல்லது ஒருவர் மற்றொருவருக்குத் தனது தொழில் பெயரையும், தொழில் முறைகளையும் சில வரையறைகளுக்கு உட்பட்டு பயன்படுத்திக்கொள்ளத் தரும் லைசென்ஸ் என்றுகூட கூறலாம். அவ்வாறு லைசென்ஸ் வாங்கியவர் அந்தத் தொழிலின் பெயரையும் வழிமுறைகளையும் வைத்துத் தொழில் செய்வார். பெயர் மற்றும் தொழில்முறைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, லைசென்ஸ் வாங்கியவர், தனக்கு லைசென்ஸ் தந்தவருக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தைத் தொடர்ந்து கட்டணமாகக் கொடுக்க வேண்டும். இதுதான் ஃப்ரான்சைஸ் பிசினஸுக்குப்பின் உள்ள ஏற்பாடு.
இதில் லைசென்ஸ் தருபவர் ஃப்ரான்சைஸர் (franchisor)  என்றும், லைசென்ஸ் வாங்குபவர் ஃப்ரான்சைஸி (franchisee) என்றும் அழைக்கப்படுவார்கள்.
தொழில் உறவு என்று பார்த்தால், ஃப்ரான்சைஸர் தனது தொழில் உரிமைகளை, குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டு, ஒரு கட்டணத்துக்காக ஃப்ரான்சைஸிக்கு விற்கிறார்.
fran

Example
1.Nilgris -நீல்கிரிஸ்.
2.appollo pharmecy – அப்பல்லோ மருந்தகம்
3.Green trands – கிரின் ட்ரெண்ட்ஸ்
4.More – மோர்.

ஃப்ரான்ச்சைஸிங் பிசினஸ் எப்படி தொடங்கலாம்னு ஒரு தனி பதிவில் பார்போம்.

வியாபாரமுறைகள் பகுதி – 2

 

2.Multi Level Marketing

இதை  Single Level Marketing(SLM) OR Direct Selling or Alternate Marketing என்றும் சொல்லுவார்கள். ஒரு உற்பத்தியாளர் தயாரிக்கும் ஒரு பொருள் நேரடியாக கஸ்டமர் கிட விற்பனை செய்வதுதான் இந்த MLM. இந்த மார்கெட்டிங் Special என்னனா வாடிக்கையாளர்களே வியாபாரிகள் (CUSTOMER AS MARKETER) அதாவது அந்த கம்பெனியில் பொருள் வாங்கும் வாடிக்கையாளர்களை அந்த வியாபாரத்தில் ஈடுபடுத்தி லாபம் ஈட்டும் முறை தான் இந்த MLM. இதில் ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கு ஏற்றவாறு கஸ்ட்மர்களை cover பண்ணுவதற்க்கு பல யுக்தி use பண்ணுவங்க…

mlm
Multi Level Marketing
இந்த மார்கெட்டிங் விசயத்திற்க்கு தேவை
  1. SELF USE – Product ஐ வாங்கி பயன்படுத்தனும்.
  2. RETAIL – Product ஐ விற்பனை செய்யனும்.
  3. SPONSORING – வியாபார்த்தை மத்தவங்களுக்கும் கற்று கொடுக்கனும்.
Example
Amway products, Herba life.

வியாபாரமுறைகள் பகுதி – 1

 

ஹாய்…! இந்த பகுதியில் நம்ம நடைமுறையில் வியாபாரமுறைகளை பத்தி பார்க்கலாம். எந்த ஒரு விசயத்துக்கும் கண்டிப்பா ஒரு method இருக்கும்.. அது போல பிசினஸ்க்கும் 3 வகையான வியாபாரமுறை இருக்கு..
ஒரு தொழில் தொடங்குவதற்கு முன் ஒரு நபர் செய்யும் புத்திசாலியான விசயம் 3 வகையான வியாபாரமுறையில்  எந்த வகையான வணிகமுறையை உங்கள் தற்போதைய நிலைமை, பணம் மற்றும் நேரத்தை பொறுத்து நீங்கள் choose பண்ணுகிறீர்கள் என்பது தான்.
virgin-media-businessஇந்த 3 வணிகமுறையும் எப்பொதும் நம் அன்றாட வாழ்க்கையில் தொடரும் ஒன்று, நீங்கள் வாங்கும் பொருளிலிருந்து தூக்கி எறியும் பொருள் வரை…
அந்த 3 வியாபாரமுறைகள் இவை தான்..

WHEN START A BUSINESS PART- 8 Dos and Don’ts of Business- தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி – 8

 

தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி – 8

71.பணப்புழக்கம்

நீங்கள் ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் கையில் பணப்புழக்கம் இல்லாவிட்டால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. உங்கள் நிறுவனத்தில் பணப்புழக்கம் இருக்கிறதா, இல்லையா என்பதுதான் முக்கியம்.பெரும்பாலான தொழில்முனைவோர்கள் பணப்புழக்கத்தில் அதிக அக்கறை செலுத்துவதில்லை. அதிகப் பணப்புழக்கம் உள்ள நிறுவனங்கள் மட்டுமே அடுத்து என்ன, என்ன என்று யோசிக்கிறது.

72.எல்லா தொழில்களும் லாபம் தரக்கூடியதே!

எல்லா தொழில்களும் லாபம் தரக்கூடியதே..அது தரும் லாப சதவிகிதத்தில்தான் மாறும். முதலீடு செய்து தங்க முட்டையை எடுப்பதும், தவிட்டு முட்டையைப் பெறுவதும் நம் கையில்தான் இருக்கிறது!

73.யாரை நம்பியும் இந்தத் தொழில் இல்லை..

எந்த வேலைக்கு ஆள் இல்லையென்றாலும் அடுத்த ஆளை வைத்து அந்த வேலையைத் தொடரும் அளவுக்கு இரண்டாம் கட்டத்தில் உள்ளவர்களையும் தயார் செய்து வைத்திருக்கவேண்டும்.

74.யாரும் வரபோவதில்லை..

நீங்கள் எந்த மந்தையோடும் சேராதிருங்கள். ஏனென்றால், தொழிலில் இழப்பென்று ஒன்று வந்தால், அப்போது உங்களை மந்தையோடு சேர்ந்தவர்கள் வந்து நிற்கப் போவதில்லை.

75.வெற்றியை பகிர்ந்துகொள்….

நம்முடைய வெற்றிக்கு நாம் மட்டும் உரிமைகொண்டாடமுடியாது. வெற்றிக்கான பயணத்தில் நமக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவியவர்கள் எல்லோரையும் மறக்காமல் நினைவு கூர்வதும், அவர்களோடு அந்த வெற்றியை பகிர்ந்துகொள்வதும் அவசியம்.

76.மாற்றம் ஒன்று தான் மாற்றாதது…

எல்லா தொழில்களிலும் காலப்போக்கில் பல மாற்றங்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கும். தேவைப்பட்டால் அவற்றுக்கேற்ப நமது செயல்பாடுகளை மாற்றிக்கொண்டு தொடர்ந்து முன்னேறவேண்டும்.

77.நிறுவனத்தின் அடிப்படை தெரியவை…

ஒரு நிறுவனத்தின் அடிப்படை கொள்கைகள், நம்பிக்கைகள் என்னென்ன என்பதை நிறுவனத்தின் கடைநிலை ஊழியர்கள்வரை எல்லோருக்கும் சென்று சேரவேண்டும். அப்படி உருவாகும் இயல்பான கலாசாரம்தான், அந்நிறுவனத்துக்குப் பெரிய வெற்றிகளைத் தேடித் தரும்.

78.வாடிக்கையாளர்களால் நீங்கள் வாடிக்கையாளர்களுக்காக நீங்கள்..

நமது கடைக்குள், வாடிக்கையாளர்கள் எந்த அளவு செளகாரியமாக உணர்கிறார்களோ, அந்த அளவு அவர்கள் அதிகம் பொருட்களை வாங்குவார்கள். அவர்களை சிரமப்படுத்தாதபடி வேண்டிய வசதிகளை செய்துகொடுங்கள். ஷாப்பிங் என்பதை ஓர் உற்சாகமான அனுபவமாக மாற்றுங்கள். உங்கள் கடையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும், லாபமும் தானாக அதிகரிக்கும்.

79.Communication (தொடர்பு)..

பேச்சு, எழுத்து ,சைகை போன்றைவை பிறரை தொடர்புகொள்ளும் வழியாகும். அவை சரியானதாகவும், தெளிவானவானதாகவும் அமைய வேண்டும். பிறரை நமக்கு சாதகமாக இணங்கவைக்கும் ஆற்றல் கவனிக்கவைக்கும் ஆற்றல் போன்றவை தொழில்முனைவோருக்கு (Entrepreneurs) தேவையான பண்பாகும்.

80.தனி முத்திரை பதியுங்கள்..

தொழிலின் முத்திரை குறியீட்டை உருவாக்குங்கள். நற்பெயரை சம்பாதியுங்கள்.

WHEN START A BUSINESS PART- 7 Dos and Don’ts of Business- தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி – 7

 

தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி – 7

61.முதலீட்டாளர்கள் மிகவும் தேவை.

நம் தொழிலை விரிவுபடுத்த முதலீடு மிக அவசியம். நம் தொழிலை நம்பி முதலீடு செய்யக்கூடியவர்களைத் தேடிக் கண்டறிவதும், அவர்களுக்கு நம்பிக்கையூட்டும்வகையில் நமது கனவை விவரித்து திருப்திப்படுத்துவதும் மிக முக்கியம்.

62.வாடிக்கையாளரே வியாபாரிகள்..

லாபத்தின் ஒரு பகுதியை, உங்களது வாடிக்கையாளர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள் (PROFIT SHARING). இதனால் உங்கள் லாபம் குறையாது, லாபம் கூடும்!

63.தரம்+சேவை = கூடுதல் லாபம்..

மார்கெட்டிங் ஜாலங்கள், விளம்பரத் தந்திரங்கள் போன்றவற்றைவிட, தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகள்தான் ஒரு நிறுவனத்திற்கு அதிகப் புகழை, கூடுதல் லாபத்தை பெற்றுத்தரும்.

64.உழைப்புதான் எல்லா வாய்ப்புகளையும் திறக்கும் சாவி.

கடினமாக உழைப்பதை விட சாமர்த்தியமாக உழைக்க கற்றுகொள்ளுகங்கள்.

65.காப்பியடிப்பது தவறே இல்லை..

அடுத்தவர்கள் செய்கிற நல்ல விஷயங்கள்,லாபம் ஈட்டும் முறைகள், தொழில் உத்திகளை கவனித்து, அவற்றை தாராளமாக பின்பற்றுங்கள். இந்த விஷயத்தில் காப்பியடிப்பது தவறே இல்லை.

66.இப்போ இப்போ இப்போ ராமசாமியாய் இருங்கள்..

ஒரு நல்ல யோசனையை, உடனே செயல்படுத்துங்கள். ஆனாலும் அதைச் யோசித்து செயல்பட மறவாதீர்கள்.

67.நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவும்…

நிறுவனங்களின் பொறுப்பு வெறும் விற்பனையோடு மட்டும் முடிந்துவிடவில்லை. நிறுவனத்தில் இயங்கும் எல்லா பிரிவுகளும் சிறப்பாகச் செயல்பட்டால்தான் ஒட்டுமொத்த வெற்றியும் லாபமும் அதிகரிக்கும்.

68.OLD IS GOLD.

தொழிலில் வெற்றிபெருவதற்குப் ‘பழைய’ அந்தகால கொள்கைகள், நம்பிக்கைகளெல்லாம் சரிபடாது என்று நினைக்காதீர்கள். அவை எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியவை.

69.எங்கிருந்து ஆட்களைத் தேர்வு செய்யவேண்டும்..

உறவுகளின் சிபாரிசு, நண்பருக்குத் தெரிந்தவர் என்ற அடிப்படையில் ஆட்களைத் தேர்வு செய்வது கூடவே கூடாது. தொழிலுக்கு முதல் எதிரியே இந்த சிபாரிசுப்படி ஆட்களை நியமிப்பதுதான். அவர்களை முழுமையாக வேலை வாங்கமுடியாமல் சிபாரிசு தடுக்கும்.அதே பொருத்தமான உறவினர்கள் வீட்டில் இருந்தால், அவர்களைப் பயன்படுத்தலாம். இது நமது பிஸினஸ் என்பதால், அவர்கள் அக்கறையோடு எல்லா வேலைகளையும் எடுத்துப் போட்டுச் செய்வார்கள். வேகமான வளர்ச்சிக்கு அது உதவும்.

70.வாடிக்கையாளர்கள் பார்வையில் சிந்தித்தல்…

எப்போதும் வாடிக்கையாளர் பார்வையில் பிஸினஸை சிந்தியுங்கள்.  நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு என்ன கொடுக்க விரும்புகிறீர்கள் என்பதைவிட வாடிக்கையாளர்கள் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க் கிறார்கள் என்பதே முக்கியம்.

WHEN START A BUSINESS PART- 6 Dos and Don’ts of Business- தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி – 6

 

தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி – 6

51.தேவை என்ன என்பதை அறிந்து செயல்படுங்கள்..

உங்கள் தொழிலிலுக்கு என்ன தேவை,உங்கள் வாடிக்கையாள்ர்க்ளுக்கு என்ன தேவை,உங்களின் பணியாளர்க்ளுக்கு தேவை என்ன என்பதை அறிந்து செயல்படுங்கள்..

52.ஏழு தலைமுறைக்கும் முதலாளியாய் இரு., கடனாளியாகதே…

எந்த ஒரு விசயத்திலும் கடன் இல்லாமல் இருக்கவே முடியாது. ஆனால் வாழ்க்கை முழுவதும் கடனாளியாய் இருப்பது தொழில் முனைவோருக்கு அழகல்ல.

53.நிபுணராக இருக்க தேவையில்லை…
 
எந்த ஒரு விசயத்திற்க்கும் நிபுணராக அவசியமே இல்லை… அந்த விசயத்தை பற்றிய அடிப்படை மற்றும் கற்று கொள்ளும் ஆர்வம் இருந்தலே போது உங்கள் தொழிலிலை கண்டிப்பாக உய்ர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.

54.பயிற்சியும், முயற்சியும்…

பயிற்சியும், முயற்சியும் தான் உங்கள் தொழில் வாழ்க்கையை நிர்ணயிக்கும். எந்த தொழிலாக இருந்தாலும் சரி அது உங்களுக்கு தினமும் ஒரு பாடத்தை கற்று தரும்.

55.எல்லாம் சரியா இருக்கனும்…

சரியான பொருள் அல்லது சேவையை(Product or service), சரியான இடத்தில்(place), சரியான நேரத்தில்(time), சரியான விலைக்குக்(Price) கிடைக்கச் செய்வது தான் பிசின்ஸில் ஒரு சிக்கலான ஒன்று அதை சரியாக செய்தால் சக்சஸ் தான்.

56.80/20 விதி உங்கள் தலைவிதி…

நமது நிறுவனத்தின் மொத்த வருவாயில் சற்றேறக்குறைய 80 சதவீதம்,  20 சதவீத வாடிக்கையாளர்கள் மூலமாகப் பெறப்படுகிறது.80/20 விதியை நம்பிப் பயன்படுத்துங்கள்.அப்போது தான் நீங்கள் வாடிக்கையாளர் விசுவசத்தை (CUSTOMER LOYALITIY) பெறமுடியும்.

57.ரகசியம் உங்களிடம் மட்டும்…

தொழிலிலை பற்றிய எந்த ஒரு விசயமாக இருந்தாலும் சரி அது உங்களுக்கும் உங்கள் தொழில் துனைவருக்கும் மட்டுமே தவிர வேறு யாருக்கும் தெரியாதிருப்பது நல்லது.

58.நிர்வாக திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்…

தொழிலிலுக்கு மிக முக்கியமான ஒன்று தான் நிர்வாகம் இது இல்லை என்றால் உங்கள் தொழில் உங்களுக்கே ஆப்பு வைத்துவிடும்.

59.பணியாளரும் தூண்களே…

ஒரு சரியான பணியாளரை சரியான வேலைக்கு அமர்த்துவது தான் தொழிலில் மிக ரிஸ்க்கான வேலை. அதை சரியாக செய்தாலே நீங்கள் வெற்றியை நோக்கி பயணிக்க போகிறீர்கள். என்று அர்த்தம்.

60.மார்கெட்டிங் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்…

மார்கெட்டிங் என்பது விற்பனை தான் என்று நினைகிறீர்கள் என்றால் அது முற்றிலும் தவறு. எனவே மார்கெட்டிங் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்…

அடுத்த 10 அடுத்த பகுதியில்….

வாரம் ஒரு வணிக வித்தகர் - மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் தலைவர் திரு.சதிஸ்குமார்

 
வாரம் ஒரு வணிக வித்தகர்(பெரிய ஜாம்பவாங்களின் சின்ன அனுபவங்கள்) 

இந்த வாரம் நாம் பார்க்கபோகும் ஜாம்பவான் ஒரு சாதாரண விவசாய பின்புலத்தை உடைய இவர் இன்று ஒரு பெரிய தொழிலதிபராக உருவெடுத்திருகிறார் அவர்தான் மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் தலைவர் திரு.சதிஸ்குமார் அவர்கள்

இவருடைய வெற்றிக்கு காரணம் அவருடைய மாற்று சிந்தனையும் நம்பிக்கையும் தான்.

வாரம் ஒரு வணிக வித்தகர் - மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் தலைவர் திரு.சதிஸ்குமார்

 
வாரம் ஒரு வணிக வித்தகர்(பெரிய ஜாம்பவாங்களின் சின்ன அனுபவங்கள்) 

இந்த வாரம் நாம் பார்க்கபோகும் ஜாம்பவான் ஒரு சாதாரண விவசாய பின்புலத்தை உடைய இவர் இன்று ஒரு பெரிய தொழிலதிபராக உருவெடுத்திருகிறார் அவர்தான் மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் தலைவர் திரு.சதிஸ்குமார் அவர்கள்

இவருடைய வெற்றிக்கு காரணம் அவருடைய மாற்று சிந்தனையும் நம்பிக்கையும் தான்.

Sunday, May 29, 2016

வாரம் ஒரு வணிக வித்தகர்-கெவின்கேர் நிர்வாக இயக்குநர் திரு சி.கே.ரெங்கநாதன் பேசுகிறார்

 
கெவின்கேர் நிர்வாக இயக்குநர் திரு சி.கே.ரெங்கநாதன் பேசுகிறார்
இன்னைக்கு கெவின்கேர் நிர்வாக இயக்குநரா என்னை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கலாம். ஆனா, இந்த இடத்தை எட்டிப்பிடிக்க மேற்கொண்ட பயணம் எவ்வளவு சிரமமாகவும் அதே சமயம் சுவாரஸ்யமாகவும் இருந்தது தெரியுமா? அந்தப் பயணத்தின் அனுபவங்கள் என் ஆளுமைத்திறனை எந்த அளவுக்கு உயர்த்தியதுனு உங்களோட பகிர்ந்துக்க ஆசை!

WHEN START A BUSINESS PART- 5 Dos and Don'ts of Business- தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி - 5

 
தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி - 5

Friday, May 27, 2016

WHEN START A BUSINESS PART- 4 Dos and Don'ts of Business- தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி - 4

 

தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி - 4

Thursday, May 26, 2016

WHEN START A BUSINESS PART- 3 Dos and Don'ts of Business- தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி - 3

 
தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி - 3

Wednesday, May 25, 2016

WHEN START A BUSINESS PART- 2 Dos and Don'ts of Business- தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி - 2

 
தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி - 2

Tuesday, May 24, 2016

WHEN START A BUSINESS PART-1Dos and Don'ts of Business- தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி - 1

 
            எனக்கு வேலை வேண்டாம் நான் யாரிடமும் கைகட்டி நிற்க விரும்பவில்லை...!ஒரு தொழில் செய்து அதில் இருந்து கிடைக்கும் பணம் இருக்கிறதே. அந்தச் சுகமே தனிதான் என்று வேலையை விடுத்து சொந்தமாகதொழில் தொடங்குபவர்கள் கண்டிப்பாக இதை படிக்க வேண்டும்.

Monday, May 23, 2016

BEFORE STARTING A BUSINESS PART - 6 தொழிற்கடன் வாங்க சில குறிப்புகள்...

 
             தொழில் தொடங்கி அம்பானி போல ஆகிவிடலாம் என்கிற கனவோடு களமிறங்குகிற பலர் எடுத்த எடுப்பிலேயே தடைபட்டு நின்றுவிடுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், 'பணம் இல்லை; கடன் கேட்டேன்; கிடைக்கவில்லை' என்பதாகவே இருக்கிறது. 

Sunday, May 22, 2016

இந்த வார ஸ்பெஷ்சல்- Fear management

பய மேலாண்மை (Fear Management),

"பயமிருந்தால் சிலந்தியும் உன்னை சிறைபிடிக்கும்." என்ன ஒரு அற்புதமான வரி.

வாரம் ஒரு வணிக வித்தகர்-திரு.நல்லி குப்புசாமி செட்டியார் சொன்ன முக்கிய நிர்வாகவியல் கூறுகள் (Management Techniques)

 
வாரம் ஒரு வணிக வித்தகர்
(பெரிய ஜாம்பவாங்களின் சின்ன அனுபவங்கள்) 

திரு.நல்லி குப்புசாமி செட்டியார் (chairman of Nalli)

Saturday, May 21, 2016

BEFORE STARTING A BUSINESS PART - 5 Background Work - எந்த ஒரு விசயனாலும் ப்ளான் பண்ணி பண்ணும்....

 
எந்த ஒரு விசயனாலும் ப்ளான் பண்ணி பண்ணும்....

நமக்கு பொருத்தமான தொழிலை தேர்தெடுத்தாச்சு..... நெக்ஸ்ட் ப்ளானிங் தான்.

Friday, May 20, 2016

BEFORE STARTING A BUSINESS PART - 4 தொழிலில் நஷ்டமடைவதற்க்கான சில முக்கிய காரணங்கள்

 
 தொழிலில் நஷ்டமடைவதற்க்கான சில முக்கிய காரணங்கள்

 நம்ம ஒரு business தொடங்குனா மட்டும் போதாது அந்த business ஐ நஷ்டம் இல்லாம கொண்டு போக தெரிஞ்சு இருக்கனும். இந்த பகுதில நான் சொல்ற காரணங்கள் தான் ஒரு business நஷ்டமடைவதற்க்கான காரணங்கள். என்னெறால் நெறய பேர் பண்ணற தப்பு இதுல தான் இந்த விசயத்தை தவிர்தாலே போதும் நம்ம business ஐ நஷ்டம் இல்லாம கொண்டு போகலாம். இதுக்கு முன்னாடி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது வெற்றி மற்றும் தோல்வியுறுபவர்களை பத்தி

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension