Wednesday, May 25, 2016

WHEN START A BUSINESS PART- 2 Dos and Don'ts of Business- தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி - 2

 

தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி - 2


11.தொழில் ஆலோசகர்களும்,வழிகாட்டிகளும் மிக,மிக முக்கியம்.....

உங்களைவிட அறிவாளிகளை உடன் வைத்துக்   கொள்ளுங்கள். ஒரு நிறுவனத்திற்கு தொழில் ஆலோசகர்களும் , வழிகாட்டிகளும் மிக,மிக முக்கியம் அவங்க உங்களை விட சிறியவராக இருந்தாலும் சரி . குறிப்பாக திறமையான Auditor , Business Advisor, Business analyst,Advocate , Human Resource Advisor  போன்றோரை எப்போதும் கலந்து ஆலோசித்த பிறகே முடிவுகளை எடுங்கள்.

12.விலைப்பட்டியலைப் ஒப்பிடுதல்....

எந்த பொருளையும் கொள்முதல் செய்கின்றபோது குறைந்தபட்சம் மூன்று Supplier  களிடமாவது விலைப்பட்டியலைப் ( Price Quotation)  பெறுங்கள். இணையதளத்தில் உலவி (Search in Internet) கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

13.உதவிக்கு குடும்பம் மட்டும்..

உங்கள் தொழில் வளர்ச்சி அடைகிற வரை ,குடும்பத்தினரில் யாரவது ஒருவருடைய உதவி உங்களுக்கு அவசியம் தேவை ஏனென்றால் உங்கள் கூட வேலை செய்பவர்களும் மனிதர்கள் தான் மனம் எப்போது மாறும் என்று தெரியாது.

14.வாடிக்கையாளர்கள் தான் நமக்கு கிடைக்கும் வாய்ப்பு...

தொழில் வளர்கிற வரை பிடிவாதம் வேண்டாம். வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற படி, நெகிழ்வுத் தன்மையோடு நடந்து கொள்ளுங்கள் . உங்கள் திறமையை நிரூபித்தபின் உங்கள் ஆலோசனைகளை கேட்க அவர்கள் முன் வருவார்கள் .

15.செலவுகளை கையில் அடக்குங்கள் தேவைக்கு ஏற்ப...

முடிந்த வரை வாடகை ,சம்பளம் போன்ற நிரந்தரச் செலவுகளை குறைத்துக் கொண்டு , கொள்முதல் ,விளம்பரம் போன்ற மாறிக் கொண்டிருக்கும் செலவுகளை  அதிகரித்துக் கொள்வது நல்லது . இதனால், பணத் தேவையை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.

16.தேவை தகுந்த கடன்....

தொழிலில் எவ்வளவு முதலீடு , அதை  விட இரண்டு மடங்கு வரை நீங்கள் கடன் வாங்கலாம். அதற்கு மேல் வாங்கினால், இடர்கள் அதிகம்.

17.கடனை ஒழிக்குற வழிய பாருங்க....

வாங்குகிற கடன்களுக்கெல்லாம் மாதந் தோறும் வட்டியை மட்டுமே செலுத்தாமல், அசலில் ஒரு பகுதியையும் திருப்பிச் செலுத்தப் பழகுங்கள்.

18.Supplier Support & Management ரொம்ப அவசியம்....

முடிந்தவரை Supplier-களிடம் பணத்தைத் திரும்பச் செலுத்துவதற்கான காலக்கட்டத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

19.பல தொழில் ஆரம்ப கட்டத்தில் வேண்டாம்.....
எளிதில் பணம் கிடைக்கிறது என்பதற்காக, பல தொழில்களில் கவனம் செலுத்தாதீர்கள்( Don’t Focus Many-things)  . நீங்கள் பணத்தை  தேடி ஓடுவதை  விட, பணம் உங்களைத் தேடி வரும் வகையில் , உங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளுங்கள் .

20.வரலாறு மிக முக்கியம் அமைச்சரே....

உங்கள் தொழிலில் ஏற்படும் லாப,நட்ட (profit & Loss)  கணக்குகள், ஒவ்வொரு மாத,வருட முடிவில் தொழிலை பற்றிய பகுப்பாய்வுகள் (milestone) மிக முக்கியம்.. இது உங்களுடைய தொழிலை மேம்படுத்த உதவும்.

அடுத்த 10 நாளைக்கி தான்...

No comments:
Write comments

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension