Thursday, May 26, 2016

WHEN START A BUSINESS PART- 3 Dos and Don'ts of Business- தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி - 3

 

தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி - 3


21.நம்பிக்கை இருந்தால் முதலாளியாகு..இல்லனா தொழிலிலாலியாய் இரு..
மாதந்தோறும் உறுதியாக வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே , ஒரு ஆளை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுங்கள். அதுவரை நீங்கள் தனி ஆளாக ஓடிக்கொண்டே இருங்கள்.

22.யாரயும் பிடித்து தொங்காதீர்கள்.

யாரயும் எதிர் பார்க்காதீர்கள்,உங்களை நம்பி செயல்படுங்கள்.

23.பணத்துக்காக தொழில் தொடங்காதீங்க...

பணம் முக்கியம் தான் அதை விட முக்கியம் உங்க தொழில்... நம்ம ஆரம்பிக்குற தொழில் நம்ம சாகும்(life time business) வரை இருக்கும்...

24.கஸ்டமர் சேவைகளுக்கு செலவு செய்யுங்கள்..

மார்கெட்டிங்கிற்க்கு செலவு செய்வதை விட .கஸ்டமர் சேவைகளுக்கு அதிகமாக செலவு செய்யுங்கள்.. நம்மளோட கஸ்டமர
தக்க வைக்குரது தன் பெரிய விசயம்.

25.சிறந்த குழுவை உருவாக்குங்கள்.....

உங்களுக்கென்று குழுவை உருவாக்குங்கள், அது உங்க நண்பர்களாக இருந்தாலும் சரி, இல்லை உங்களிடம் வேலை பார்கிறவர்களாக இருந்தாலும் சரி உங்களுக்கு நம்பிக்கையானவர் என்றால் மட்டுமே தவிர வேறு யாரயும் சேர்காதிங்க.. அது உங்களுக்கு ஆபத்தாய் முடிந்து விடும்.

26.உங்கள் மாதிரியே உங்கள் பார்ட்னர்...

நீங்க தொழிலை அதிகமாக்கனும், தொழிலை அடுத்த் கட்டத்துக்கு கொண்டு போகனும்னு நினைச்சா.. தனி ஆளாக இருந்து செய்ய முடியுமென்றால் சரி... தொழிலுக்கு இன்னொருவர் இருந்தால் என யோசிப்பவர்கள் சரியான பார்ட்னரை தேர்ந்து எடுக்கனும்.அது உங்க நண்பர்களாக இருந்தாலும் சரி, இல்லை உங்களிடம் வேலை பார்கிறவர்களாக இருந்தாலும் சரி உங்களுடன் ஒத்த கருத்துள்ள நபர்களை கண்டுபிடியுங்கள்.அதவிட முக்கியம் நீங்க அவருக்கு இப்ப என்ன நிலையில் இருக்கிரோம், எப்படி பிசின்ஸை கொண்டுபோக போகிறோம் எல்லாத்தையும் முன்னடியே பேசிடுங்க அப்ப தான் எதிர் காலத்துல உங்களுக்கு பிரச்சனை வராமல் இருக்கும்.

27.விரைவாக முடிவை எடுங்கள்...

எந்த ஒரு விசயத்தையும் செய்யுறத்துக்கு முன்னாடி ஆயிரம் தடவை யோசிங்க, மத்தவங்க ஆலோசனையும் கேட்டு, நீங்களும் அத பத்தி தெரிஞ்சுகிட்டு நீங்க அத முடிவ விரைவில் எடுங்க எடுத்த முடிவ தப்பா இருங்க்கும் பட்சத்துல மாத்தலமே தவிர இவரு சொன்னா அவன் சொன்னா மாத்து நீங்கனா அத நீங்க செய்வது ரொம்ப கஸ்டம் சரியோ,தப்போ முடிவ சிக்கிரமாவும்,நல்லா யோசிச்சு எடுங்க..

28.துணிந்து செயல்படுங்கள்...

பிசினஸை பொறுத்தவரை ரிஸ்க் எடுத்தால் தான் ரஸ்க் சாப்பிட முடியும். அப்படி ரிஸ்க் எடுக்க தயார் இல்லனா ஒரு வறுக்கி கூட சாப்பிட முடியாது.

29.Updation ரொம்ப முக்கியம்.

தொழிலின் அன்றை நிலை என்ன,புதிய வரவுகள் என்னென்ன என்பதை ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள வேண்டும்.

30.பெரியதாக எங்கள்..
நாம் நமது நிறுவனம், தொழில் சிறியதாக தொடங்கப்பட்டதற்கு வெட்கப்பட கூடாது, இகழ்வாக கருதகூடாது. கனவு, உழைப்பு, எண்ணம், செயல் பெரியதாக இருக்கும்பட்சத்தில் நாமும் பெரிய இடத்தை அடைந்தே தீருவோம் என எண்ணுங்கள்.

அடுத்த 10 நாளைக்கி தான்...

No comments:
Write comments

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension