Wednesday, July 13, 2016

SCARCITY MARKETING - ஸ்கேர்சிட்டி மார்கெட்டிங் ஸ்ரட்டெஜி

SCARCITY MARKETING :

என்ன அவுட்பவுண்ட் மார்கெட்டிங் புரிஞ்சுதா? அடுத்து பார்க்கலாமா,,,?


ஆடி மாசம் பொறக்க போவுது வேற SCARCITY MARKETING ஆரம்பித்து விடும்.சரி இந்த பகுதியில் நம்ம SCARCITY MARKETING ஐ பற்றி பார்க்கலாம்,

ஸ்கேர் (SCARE) - இந்த  வார்த்தையிலிருந்தே உங்களுக்கு புரிஞ்சுஇருக்கும்னு நினைக்குறேன்.
பொருளின் இருப்பு நிலையை காட்டி மக்களை பயமுறுத்தி சந்தைப்படுத்தும் முறைதான் இந்த SCARCITY MARKETING STRATEGY,,

பயமுறுத்தி மார்கெட்டிங்கா,,,,?  

வடிவேலு ஒரு படத்துல சைக்கிள்ல டீ விக்கும் போது எதிர் டீக்கடைய பார்த்து அவன் கடைல டீ குடிச்சா வாய் பூரா புண்னு வந்து செத்துடுவிங்க,, அவன் கடைல டீ குடிச்சான்னென்ன வியாதி வரும்னு சொல்லுரேன்ஆ தம் டீ கும் டீ,,,,,ஆ தம் டீ கும் டீ இப்படி மார்கெட்டில் இருக்கும் அடுத்த பொருளுடன் விமர்சனம் செய்து பயமுறுத்தி செய்வதா....? இல்லை (ஆனால் complan horlics போன்றவை மற்ற பொருளுடன் விமர்சனம் செய்யும் விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.)

ஏன் விவேக் கூட ஒரு படத்துல 

ஏய் நீ இந்த பொருளை வாங்களைனா,,, உன்ன எங்கயும் விட்மாட்டேன்,, நீ என் பொருளை வாங்கித்தான் ஆகனும், வாங்கல உன்ன கொல பண்ணிடுவேன்!!!!!!! என மிரட்டி செய்வது இல்லை இந்த மார்கெட்டிங்

இந்த வகையான மார்கெட்டிங் பெரும்பாலும் ஒரு பொருளின் விற்பனையை அதிகரிக்க அல்லது மக்களை அதிகமாக திரட்ட இந்த யுக்தியினை பயன்படுத்துவார்கள்.

உதாரணமாக ROLLS - ROYCE ஒட சைனீஸ் எடிசன் கார் ஆன Phantom விலை அதிகம் என்றாலும் உடனே எல்லாம் விற்றுவிட்டது அதற்க்கு காரணம் குறைந்த உற்பத்தி, தரம் மற்றும் இந்த ஸ்கேர்சிட்டி மார்கெட்டிங் தான் முக்கிய காரணம்..

எப்படி மார்கெட்டிங் மூலம் எப்படி மக்களை தூண்டுகிறார்கள் என பார்ப்போம்....
1. பொருளின் எண்ணிக்கை குறைவாக காட்டி தூண்டுதல்.

2. இலவச பொருட்களை குறைவான நாட்களில் வழங்கி தூண்டுதல்.

3. இதர சலுகைகளை குறைவான நாட்களில் வழங்கி தூண்டுதல்.

4. மற்ற பொருளுடன் ஒப்பிடுவது மூலம் தூண்டுதல். 

இவை தான் இந்த மார்கெட்டிங்கோட முக்கிய அம்சமே...

டிவி,பேனர்கள் போன்ற ஆஃப்லைன் மார்கெட்டிங்களிலும்,வெப்சைட்,சோஷியல் நெட்வொர்க் சைட், போன்ற ஆன்லைன் மார்கெட்டிங்களிலும் இந்த ஸ்கேர்சிட்டி மார்கெட்டிங் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்றே சொல்லலாம்.

நம்ம ரெகுலரா பார்க்குற கேட்குற விசயம் தான் ஆனாலும் ஒவ்வொரு மார்கெட்டிங் யுக்தியும் ஒரு தனி சிறப்பம்சத்தை பெறுவது எப்போது என்றால் பொருள் அல்லது சேவையை பற்றிய நல்ல விதமான கருத்துக்களும், மக்களை கவரும் விளம்பரங்களுமே...

தொடர்ந்து மார்கெட்டிங்கையே பார்த்து பார்த்து போர் அடிக்குதா...? எனக்கும் போர் அடிக்குது தான் அதனால அடுத்த பதிவில் மார்கெட்டிங் அல்லாமல் வேறு ஒரு TOPIC பார்க்கலாம் சரியா....


நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இதை FACEBOOK, GOOGLE PLUS, TWITTER, LINKED IN, TELEGRAM, WHATSAPP என அனைத்திலும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

எங்களை தொடர....

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension