Wednesday, March 8, 2017

Business corner E-Magazine

Thursday, February 23, 2017

How to use 2 whatsapp account in one smart phone

Friday, January 13, 2017

இனி வாட்ஸ்ஆப்பில் BUSINESS CORNER குழு

தொழில்முனைவோருக்காக இனி வாட்ஸ்ஆப்பில் BUSINESS CORNER குழு

Tuesday, October 25, 2016

WORD OF MOUTH MARKETING

ஹாய் எல்லாரும் நல்ல இருக்கிங்களா? ரொம்ப நாள் கழிச்சு நம்ம business corner ல போஸ்ட் போடுறத்துகு சாரி
கொஞ்சம் வேலை பளூவினால் தான் இந்த பிரச்சனை சரி இனி

கடைசிய 5 இருந்தால் அமோக வெற்றி பார்த்தோமா

இப்ப மார்கெட்டிங் யுக்திகள் continue பண்ணுவோம்

இப்ப நம்ம பார்க்கபோவது WORD OF MOUTH MARKETING

Saturday, August 13, 2016

ஐந்திருந்தால் அனைத்தையும் பெறலாம் - 5S Concept

ஐந்திருந்தால் அனைத்தையும் பெறலாம்



ரொம்ப நாள் கேப்புக்கு அப்புறம் பதிவிடுகின்றேன்  அதற்க்கு மிகவும் வருந்துகிறேன் இனி கண்டிப்பாக வாரம் ஒரு தகவல் கண்டிப்பாக பிசினஸ் கார்னர் தளத்தின்  மூலமாக உங்களுக்கு கிடைக்கும்

என்ன தான் தொழிலதிபர்களை தமிழ் சினிமாக்கள் வில்லனாய் சித்தரித்தாலும், அரசியல்வாதிகள் பிசினஸ்மேன்களை அமெரிக்க ஏகாதிபத்திய கைக்கூலிகள்’ என்று வர்ணித்தாலும், பலருக்கும் பிசினஸ் பண்ணத்தான் ஆசை இருக்கிறது.
பி அண்ட் ஜி (பிராக்டர் அண்ட் கேம்பிள்) லெவலுக்கு இல்லையென்றாலும் எதாவது தொழில் தொடங்கவேண்டும் என்ற விருப்பம் இருக்கவே இருக்கிறது. ஆயிரம் சொல்லுங்கள், பிசினஸ்மேன் என்ற அடைமொழி அடை அவியலாய் இனிக்கத்தான் செய்கிறது.
சரி, தொழில் தொடங்கி வெற்றி பெற என்ன வேண்டும்?
அசாத்திய தில், அபரிமிதமான லக், அதிகளவு பணம், அமோக ஆதரவு அனைத்தும் வேண்டும். இதைப் பெறுவது எப்படி என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு இந்த கட்டுரையை படிப்பவர் எனில், ஐ ஆம் சாரி, இக்கட்டுரை இதைப் பற்றியதல்ல.
உங்களிடம் தொழில் துவங்கும் அளவிற்கு ஒரு ஐடியா இருந்து, அந்த ஐடியா சரியா தவறா என்று சரி பார்ப்பது எப்படி என்ற சந்தேகம் இருந்தால், அந்த ஐடியா பிசினஸ் துவங்க ஏதுவானதா, ஏமாற்றம் அளிக்குமா என்ற ஐயம் இருந்தால், மேலே படிக்கவும். இதைத்தான் பத்தி பிரித்துப் பார்க்கப் போகிறோம்.
தொழில் துவங்க நீங்கள் வைத்திருக் கும் ஐடியாவை செயல்படுத்தும் முன் நான்கு ‘எஸ்’ (S) இருக்கிறதா பாருங்கள் என்கிறார் ‘பீட்டர் காஸ்கா’.
Entrepreneur என்ற பத்திரிகையில் பிசினஸ் ஐடியாவிற்கு நான்கு எஸ்களின் ஆசி பரிபூரணமாய் இருந்தால் பயமில்லாமல் பிசினஸ் பண்ணலாம் என்று விளக்குகிறார்.
Solution (சொல்யூஷன்)
பிசினஸ் ஐடியாவின் அடிநாதம் இது. வாடிக்கையாளருக்கு ஏதோ ஒரு ஆசை, பயம், ஆபத்து, நம்பிக்கை, எண்ணம் இருக்கலாம். அது நிறைவேறாத தேவையாக இருக்கலாம். அல்லது பாதி மட்டும் நிறைவேறி மீதி நிறைவேறாமல் நிற்கலாம். இதை ‘பெயின் பாயின்ட்ஸ்’ (Pain points) என்பார்கள்.
இதற்கு தீர்வளிக்கும் வகையில் உங்கள் ஐடியா இருக்கவேண்டும். இருந்தே தீரவேண்டும். வாடிக்கையாளர் பெயின் பாயிண்டிற்கு சொல்யூஷனாய் உங்கள் ஐடியா இருந்தால்தானே உங்கள் பொருள் அவருக்குப் பயன்படும். அப்பொழுது தானே உங்கள் பொருளை வாங்குவார்.
ஒரு காலத்தில், போகும் இடமெல்லாம் போன் பேச எஸ்டிடி பூத்தை தேடவேண்டியிருந்தது ஒரு பெயின் பாயிண்ட். செல்போன் அதற்கு சொல்யூஷனாய் அமைந்தது. ட்ரிங் ட்ரிங் என்று வெற்றி பெற்றது. பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகளுக்கு மடக்கென்று சமைத்து படக்கென்று பரிமாற பதார்த்தம் இல்லாதிருந்தது ஒரு பெயின் பாயிண்ட். ‘மேகி’ அதற்கு சொல்யூஷனாய் அமைந்தது. டூ மினிட்ஸில் வெற்றி பெற்றது.
அதற்காக உங்கள் சொல்யூஷன் புதியதாக, அதுவரை மார்க்கெட் பார்த்திராத புதிய பொருளாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை. ஏற்கெனவே மக்கள் உபயோகித்து வரும் பொருளில் கூட பெயின் பாயின்ட்ஸ் இருக்கலாம். அவர்கள் தேவையை முழுமையாக தீர்க்காமல் இருக்கலாம். அந்த தேவையை முழுமையாய் பூர்த்தி செய்யும் சொல்யூஷனாக உங்கள் ஐடியா இருந்தாலும் வெற்றி பெறலாம்.
உங்கள் ஐடியா வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்யாததாக இருந்தாலோ, ஏற்கனவே வாடிக்கை யாளர் தேவையை முழுமையாய் பூர்த்தி செய்யும் பொருளைப் போலவே இருந்தாலோ அதை குப்பையில் போடுங்கள். அந்த ஐடியாவை நம்பி இறங்கினால் உங்கள் தொழிலும் அதே குப்பைத் தொட்டிக்குத் தான் போகும். உஷார்.
System (சிஸ்டம்)
சொல்யூஷன் மட்டும் இருந்து பயனில்லை. சொல்யூஷனுக்கு உண் டான பொருளையோ சேவையையோ குறையின்றி தயாரித்து வாடிக்கை யாளருக்கு முறையாக அளிக்க முடியுமா என்பதும் முக்கியம்.
சொல்யூஷனை முழுவதுமாக வாடிக்கையாளருக்கு அளிக்க முடியவில்லை என்றால் மற்றவர்கள் துணை கொண்டு அளிக்கமுடியுமா என்று சிந்தித்து செயலில் இறங்குங்கள். பாட்டிலில் மட்டுமே ஷாம்பு விற்ற காலத்தில் அதை முதலில் விலை குறைந்த சாஷேவில் விற்கும் ஐடியாவை செயல்படுத்தியது ‘வெல்வெட்’ ஷாம்பு. சிறிய கம்பெனியான தன்னால் நாடெங்குமுள்ள லட்சக்கணக்கான கடைகளுக்கு சென்று விற்க முடியாது என்று உணர்ந்து
`கோத்ரெஜ்’ கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்து அவர்களின் பரந்த விரிந்த சேல்ஸ் நெட்வர்க் மூலம் பிராண்டை நாடெங்கிலும் உள்ள கடைகளை சென்றடைந்தது.
நல்ல ஐடியா மட்டுமே போறாது. அதை தயாரித்து, விற்க நிர்வாக அமைப்பு அவசியம். சரியான சிஸ்டம் இல்லாத கம்பெனி வெற்றி பெறாது. ஒழுங்கான நிர்வாக அமைப்பில்லாமல் எந்த ஐடியாவையும் பிசினஸ் ஆக்காதீர் கள். பிசினஸ் அதன் பாரத்திலேயே விழும். உங்கள் ஐடியாவை வேறு ஒருவர் காப்பி அடித்து பிசினஸ் துவங்கி சக்கைப் போடு போடுவார். நீங்களே அவரிடம் கைகட்டி வேலைக்குச் சேர வேண்டி வரலாம். தேவையா இது.
Strategy (ஸ்ட்ரேடஜி)
எங்கு செல்லவேண்டும் என்று முடி வெடுத்து அங்கு எப்படி செல்லவேண்டும் என்றும் தீர்மானிக்கவேண்டும். இதற்குத் தேவை உத்தி, ஸ்ட்ரேடஜி. உங்கள் ஐடியாவை பொருளாக்க போதிய பணத்தை ரெடி செய்து விட்டீர்களா? பிசினஸ் பிளான் தயாரித்தீர்களா?
ஐடியாவை எப்படி பிராண்டாக்குவது, செலவினங்கள் என்னென்ன, இலக்கை நிர்ணயம் செய்வது, எதிர்பார்த்த லாப நஷ்ட கணக்கு போன்ற அனைத்தையும் கணக்கிடத் தேவை பிசினஸ் பிளான். பாங்கிலோ, வென்சர் கேபிடல் ஃபண்டிடமோ கடன் பெறுவதற்கு மட்டுமல்ல, உங்கள் பிசினஸை வழிநடத்தவும் கூட பிசினஸ் பிளான் அவசியம்.
தெளிவான உத்தியில்லாமல் பிசினஸ் துவங்குவது பாவம். எந்த கங்கையில் குளித்தாலும் அந்த பாவம் போகாது. நஷ்டமும் தீராது. ஐடியாவை பொருளாக்கி, பிராண்டாக்கி, பிசினஸாக்கி செயல்படுத்தும் போது `பிளான் பி’ ஒன்றையும் வடிவமைத்து வையுங்கள். முதல் உத்தி வேலை செய்யவில்லையென்றால் அதன் பின் புதிய உத்தியை தேடி அலையமுடியாது. பேக் அப் பிளான் தேவை. இது தான் பிளான் பி. நான்கு டயர்கள் இருந்தும் ஸ்டெப்னி வைத்து கார் ஓட்டுவதைப் போல.
Spine (ஸ்பைன்)
பிசினஸ் ஆரம்பிப்பது ஊசியில் நூல் கோர்ப்பது போல. எடுத்த மாத்திரத்திலேயே ஊசி துவாரத்தில் நூலை செலுத்தமுடியாது. நான்கு முறை கையைக் குத்திக் கொண்டு முயலவேண்டியிருக்கிறது. குத்துகிறதே என்று கவலைப்பட்டால் கிழிந்த சட்டையைத் தான் போட்டுக்கொண்டு அலையவேண்டும். பிச்சைக்காரனைப் போல் தெரிவீர்கள். பரவாயில்லையா!
ஆரம்பித்த முதல் நாள் முதலே பிசினஸ் பிய்த்துக்கொண்டு பறக்காது. பிரயத்தனப்படவேண்டும். போராடவேண்டும். இதற்குத் தேவை தைரியம், போராடும் குணம், மன உறுதி. முதுகெலும்பில்லாதவன் முன்னேற முடியாது. முதுகெலும்பைத் தான் ஆங்கிலத்தில் ஸ்பைன் என்பார்கள்.
பல்பை கண்டுபிடிக்கும் முயற்சியில் தாமஸ் ஆல்வா எடிசன் சுமார் இரண்டாயிரம் முறை தோற்றார். இத்தனை முறை தோற்று விட்டீர்களே, இது தேவையா என்று கேட்ட போது அவர் சொன்னார்: ‘நான் தோற்கவில்லை. பல்ப் செய்ய தேவையில்லாத இரண்டாயிரம் முறைகளை கண்டுபிடித்தேன். அதை சரியாய் செய்யும் ஒரே வழியையும் கண்டுபிடித்துவிட்டேன்.’
நல்ல ஐடியா கொண்டு தொழில் துவங்க நினைத்தால் எடிசன் கூறியதை டேபிளில் எழுதி வையுங்கள். எடிசனைப் போல் போராடுங்கள். நான்கு ‘S’ இருக்கிறதா என்று செக் செய்து உங்கள் ஐடியாவை பிசினஸ் ஆக்குங்கள். அப்படிச் செய்தால் தானாக வந்து சேரும் 
ஐந்தாவது ‘S’….. Success.

Friday, July 29, 2016

ஒரே நேரத்தில் FACEBOOK page மற்றும் group போஸ்ட் பண்ண

ஒரே நேரத்தில் FACEBOOK page மற்றும் group போஸ்ட் பண்ண SlackSocial.com


ஆன்லைனில் விளம்பரம் செய்யும் அனைவருக்கும் இது மிகவும் உதவியாக இருக்கும்

Thursday, July 21, 2016

நீங்களும் பதிவிடலாம் பிசினஸ் கார்னரில் - Guest Posting

நீங்களும் எங்களுடன் இந்த பிசினஸ் கார்னர் ப்ளாகில் பதிவிடலாம்...

Wednesday, July 13, 2016

SCARCITY MARKETING - ஸ்கேர்சிட்டி மார்கெட்டிங் ஸ்ரட்டெஜி

SCARCITY MARKETING :

என்ன அவுட்பவுண்ட் மார்கெட்டிங் புரிஞ்சுதா? அடுத்து பார்க்கலாமா,,,?


ஆடி மாசம் பொறக்க போவுது வேற SCARCITY MARKETING ஆரம்பித்து விடும்.சரி இந்த பகுதியில் நம்ம SCARCITY MARKETING ஐ பற்றி பார்க்கலாம்,

ஸ்கேர் (SCARE) - இந்த  வார்த்தையிலிருந்தே உங்களுக்கு புரிஞ்சுஇருக்கும்னு நினைக்குறேன்.
பொருளின் இருப்பு நிலையை காட்டி மக்களை பயமுறுத்தி சந்தைப்படுத்தும் முறைதான் இந்த SCARCITY MARKETING STRATEGY,,

பயமுறுத்தி மார்கெட்டிங்கா,,,,?  

வடிவேலு ஒரு படத்துல சைக்கிள்ல டீ விக்கும் போது எதிர் டீக்கடைய பார்த்து அவன் கடைல டீ குடிச்சா வாய் பூரா புண்னு வந்து செத்துடுவிங்க,, அவன் கடைல டீ குடிச்சான்னென்ன வியாதி வரும்னு சொல்லுரேன்ஆ தம் டீ கும் டீ,,,,,ஆ தம் டீ கும் டீ இப்படி மார்கெட்டில் இருக்கும் அடுத்த பொருளுடன் விமர்சனம் செய்து பயமுறுத்தி செய்வதா....? இல்லை (ஆனால் complan horlics போன்றவை மற்ற பொருளுடன் விமர்சனம் செய்யும் விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.)

ஏன் விவேக் கூட ஒரு படத்துல 

ஏய் நீ இந்த பொருளை வாங்களைனா,,, உன்ன எங்கயும் விட்மாட்டேன்,, நீ என் பொருளை வாங்கித்தான் ஆகனும், வாங்கல உன்ன கொல பண்ணிடுவேன்!!!!!!! என மிரட்டி செய்வது இல்லை இந்த மார்கெட்டிங்

இந்த வகையான மார்கெட்டிங் பெரும்பாலும் ஒரு பொருளின் விற்பனையை அதிகரிக்க அல்லது மக்களை அதிகமாக திரட்ட இந்த யுக்தியினை பயன்படுத்துவார்கள்.

உதாரணமாக ROLLS - ROYCE ஒட சைனீஸ் எடிசன் கார் ஆன Phantom விலை அதிகம் என்றாலும் உடனே எல்லாம் விற்றுவிட்டது அதற்க்கு காரணம் குறைந்த உற்பத்தி, தரம் மற்றும் இந்த ஸ்கேர்சிட்டி மார்கெட்டிங் தான் முக்கிய காரணம்..

எப்படி மார்கெட்டிங் மூலம் எப்படி மக்களை தூண்டுகிறார்கள் என பார்ப்போம்....
1. பொருளின் எண்ணிக்கை குறைவாக காட்டி தூண்டுதல்.

2. இலவச பொருட்களை குறைவான நாட்களில் வழங்கி தூண்டுதல்.

3. இதர சலுகைகளை குறைவான நாட்களில் வழங்கி தூண்டுதல்.

4. மற்ற பொருளுடன் ஒப்பிடுவது மூலம் தூண்டுதல். 

இவை தான் இந்த மார்கெட்டிங்கோட முக்கிய அம்சமே...

டிவி,பேனர்கள் போன்ற ஆஃப்லைன் மார்கெட்டிங்களிலும்,வெப்சைட்,சோஷியல் நெட்வொர்க் சைட், போன்ற ஆன்லைன் மார்கெட்டிங்களிலும் இந்த ஸ்கேர்சிட்டி மார்கெட்டிங் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்றே சொல்லலாம்.

நம்ம ரெகுலரா பார்க்குற கேட்குற விசயம் தான் ஆனாலும் ஒவ்வொரு மார்கெட்டிங் யுக்தியும் ஒரு தனி சிறப்பம்சத்தை பெறுவது எப்போது என்றால் பொருள் அல்லது சேவையை பற்றிய நல்ல விதமான கருத்துக்களும், மக்களை கவரும் விளம்பரங்களுமே...

தொடர்ந்து மார்கெட்டிங்கையே பார்த்து பார்த்து போர் அடிக்குதா...? எனக்கும் போர் அடிக்குது தான் அதனால அடுத்த பதிவில் மார்கெட்டிங் அல்லாமல் வேறு ஒரு TOPIC பார்க்கலாம் சரியா....


நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இதை FACEBOOK, GOOGLE PLUS, TWITTER, LINKED IN, TELEGRAM, WHATSAPP என அனைத்திலும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

எங்களை தொடர....

Wednesday, July 6, 2016

OUTBOUND MARKETING - அவுட்பவுண்ட் மார்கெட்டிங் ஸ்ரட்டெஜி

OUTBOUND MARKETING :

எல்லாருக்கும் டிப்ஸ்4தமிழனின் ரமலான் வாழ்த்துக்கள்.. 

என்ன இன்பவுண்ட் மார்க்கெட்டிங் பற்றி புரிஞ்சுதா...? புரியலைனா கமெண்ட் பன்னுங்க....
சரி இன்னிக்கு நாம OUTBOUND MARKETING பற்றி பார்க்கலாம்.

இன்பவுண்ட் மார்கெட்டிங்கோட OPPOSITE தான் இந்த அவுட்பவுண்ட் மார்கெட்டிங். இது எல்லாருக்கும் தெரிந்த ஒரு பழமையான மார்கெட்டிங் யுக்தி தான்.

Thursday, June 30, 2016

INBOUND MARKETING - இன்பவுண்ட் மார்கெட்டிங் ஸ்ரட்டெஜி

INBOUND MARKETING :

CTA MARKETING ஐ பற்றி புரிந்ததா.....?  புரியவில்லை என்றால் தயவு செய்து உங்கள் சந்தேகங்களை கமெண்ட் பண்ணுங்க. நாங்கள் கண்டிப்பா ரிப்லைய் பண்ணுவோம்.

சரி இந்த பகுதியில் நம்ம INBOUND MARKETING STRATEGIES  பற்றி பார்க்கலாம்.

புதுமையான யுக்திகள் மூலம் பார்வையாளர்களை கவர்ந்திலுத்து அவர்களை தங்களின் வாடிக்கையாளராக மாற்றி,அவர்களுடன் நெருக்கத்தை ஏற்ப்படுத்துவதன் மூலம் சந்தைப்படுத்துவது தான்.

Tuesday, June 28, 2016

CALL TO ACTION (CTA) MARKETING - மார்கெட்டிங் ஸ்ரட்டெஜி

CALL TO ACTION MARKETING -

இது அனைவருக்கும் தெரிந்த ஒரு மார்கெட்டிங் யுக்தி தான்.. ஒரு செயலை செய்வதற்க்கு அழைப்பது

Monday, June 27, 2016

OFFLINE MARKETING - ஆஃப்லைன் மார்கெட்டிங் ஸ்ரட்டெஜி

ஆஃப்லைன் மார்கெட்டிங்:

ஆன்லைன் மார்கெட்டிங் பத்தி ஒரளவுக்கு தெரியும் அது இன்னா ஆஃப்லைன் மார்கெட்டிங்..தெரு தெருவா போய் பொருளை பத்தி சொல்லுரதா? நீங்க நினைப்பது எனக்கு புரிகிறது ஆனால் அதுவல்ல ஆஃப்லைன் மார்கெட்டிங்..

இன்றைய ஒரு பொருள் அல்லது சேவையை மக்களிடம் கொண்டு சேர்பதற்க்கு ,சமுக வலைத்தளங்கள்,வைரல் மார்கெட்டிங்   என இருந்தாலும் இந்த OFFLINE MARKETING முக்கிய பங்குவகிக்கிறது என்றே சொல்ல வேண்டும். 

Sunday, June 26, 2016

CLOSED RANGE MARKETING(CRM) - மார்கெட்டிங் ஸ்ரட்டெஜி

மார்கெட்டிங் என்பது ஒரு நிறுவனத்தின் அல்லது தனி மனிதனின் சிந்தனை செயல் தான் என்று போன பதிவில் பார்த்தோம் அல்லவா...?

இந்த பகுதியில் உலகில் என்னென்ன மார்கெட்டிங் ஸ்ரட்டெஜி இருக்கு... அதை எப்படி எப்படி தனக்கு சாதகமா பயன்படுத்தி சக்சஸ் ஆகுறங்ககுறத பத்தி இந்த பதிவிலிருந்து பார்க்கலாம்.

Friday, June 24, 2016

MARKETING STRATEGIES - மார்கெட்டிங் யுக்திகள்

STRATEGIC PLANNING ஐ பற்றி இப்ப ஒரளவுக்கு புரிஞ்சிருக்கும் நினைக்குறேன். இந்த பகுதியிலிருந்து மார்கெட்டிங்  ஸ்ரட்டெஜி பத்தி பார்க்க ஆரம்பிக்கலாம்.
மார்க்கெட்டிங் என்பது தனி மனிதர்களும்குழுக்களும், நிறுவனங்களும், தேவைகளையும்,எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து கொள்ள குறிப்பிட்ட பொருட்களை அல்லது சேவைகளைத் தயாரிப்பது, விற்பனைக்கு அளிப்பது மற்றும் பரிமாற்றம் செய்து கொள்வது ஆகியவற்றை உள்ளடக்கிய செயல்பாடு தான்.

Tuesday, June 21, 2016

STRATEGIC PLANNING - ஸ்ரட்டெஜிக் ப்ளானிங்.


மார்கெட்டிங் ஸ்ரட்டெஜி பற்றி தெரிந்த் கொள்வத்ற்கு முன் ஸ்ரட்டெஜிக் ப்ளானிங் பற்றி தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்குறேன்.

ஸோ இந்த பகுதியில் நம்ம பார்க்க போவது 

ஸ்ரட்டெஜிக் ப்ளானிங் - STRATEGIC PLANNING


அப்படின்னா என்னனு கேட்ட்கிறீர்களா...? ஒன்றும் இல்லை.

Monday, June 13, 2016

Marketing Basics - மார்கெட்டிங் அடிப்படை விளக்கம்.

 
இது வரை நம்ம blog ல பிசினஸ் பற்றி, எப்படி தொழில் கடன் வாங்குவது, பிசின்ஸ் ப்ளான் எப்படி தயாரிப்பது, தொழிலில் நஷ்டமடைவதற்கான முக்கிய காரணங்கள் என ஒரளவுக்கு பார்த்திருபோம். இப்ப அடுத்ததா மார்கெட்டிங் பற்றி பார்க்கலாம்.

Sunday, June 12, 2016

வியாபாரமுறைகள் பகுதி – 3

 

3.Franchising
ஃப்ரான்சைஸ் என்பது இருவேறு தரப்பினர்களுக்கான ஓர் ஒப்பந்தம் என கூறலாம். அல்லது ஒருவர் மற்றொருவருக்குத் தனது தொழில் பெயரையும், தொழில் முறைகளையும் சில வரையறைகளுக்கு உட்பட்டு பயன்படுத்திக்கொள்ளத் தரும் லைசென்ஸ் என்றுகூட கூறலாம். அவ்வாறு லைசென்ஸ் வாங்கியவர் அந்தத் தொழிலின் பெயரையும் வழிமுறைகளையும் வைத்துத் தொழில் செய்வார். பெயர் மற்றும் தொழில்முறைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, லைசென்ஸ் வாங்கியவர், தனக்கு லைசென்ஸ் தந்தவருக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தைத் தொடர்ந்து கட்டணமாகக் கொடுக்க வேண்டும். இதுதான் ஃப்ரான்சைஸ் பிசினஸுக்குப்பின் உள்ள ஏற்பாடு.
இதில் லைசென்ஸ் தருபவர் ஃப்ரான்சைஸர் (franchisor)  என்றும், லைசென்ஸ் வாங்குபவர் ஃப்ரான்சைஸி (franchisee) என்றும் அழைக்கப்படுவார்கள்.
தொழில் உறவு என்று பார்த்தால், ஃப்ரான்சைஸர் தனது தொழில் உரிமைகளை, குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டு, ஒரு கட்டணத்துக்காக ஃப்ரான்சைஸிக்கு விற்கிறார்.
fran

Example
1.Nilgris -நீல்கிரிஸ்.
2.appollo pharmecy – அப்பல்லோ மருந்தகம்
3.Green trands – கிரின் ட்ரெண்ட்ஸ்
4.More – மோர்.

ஃப்ரான்ச்சைஸிங் பிசினஸ் எப்படி தொடங்கலாம்னு ஒரு தனி பதிவில் பார்போம்.

வியாபாரமுறைகள் பகுதி – 2

 

2.Multi Level Marketing

இதை  Single Level Marketing(SLM) OR Direct Selling or Alternate Marketing என்றும் சொல்லுவார்கள். ஒரு உற்பத்தியாளர் தயாரிக்கும் ஒரு பொருள் நேரடியாக கஸ்டமர் கிட விற்பனை செய்வதுதான் இந்த MLM. இந்த மார்கெட்டிங் Special என்னனா வாடிக்கையாளர்களே வியாபாரிகள் (CUSTOMER AS MARKETER) அதாவது அந்த கம்பெனியில் பொருள் வாங்கும் வாடிக்கையாளர்களை அந்த வியாபாரத்தில் ஈடுபடுத்தி லாபம் ஈட்டும் முறை தான் இந்த MLM. இதில் ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கு ஏற்றவாறு கஸ்ட்மர்களை cover பண்ணுவதற்க்கு பல யுக்தி use பண்ணுவங்க…

mlm
Multi Level Marketing
இந்த மார்கெட்டிங் விசயத்திற்க்கு தேவை
  1. SELF USE – Product ஐ வாங்கி பயன்படுத்தனும்.
  2. RETAIL – Product ஐ விற்பனை செய்யனும்.
  3. SPONSORING – வியாபார்த்தை மத்தவங்களுக்கும் கற்று கொடுக்கனும்.
Example
Amway products, Herba life.

வியாபாரமுறைகள் பகுதி – 1

 

ஹாய்…! இந்த பகுதியில் நம்ம நடைமுறையில் வியாபாரமுறைகளை பத்தி பார்க்கலாம். எந்த ஒரு விசயத்துக்கும் கண்டிப்பா ஒரு method இருக்கும்.. அது போல பிசினஸ்க்கும் 3 வகையான வியாபாரமுறை இருக்கு..
ஒரு தொழில் தொடங்குவதற்கு முன் ஒரு நபர் செய்யும் புத்திசாலியான விசயம் 3 வகையான வியாபாரமுறையில்  எந்த வகையான வணிகமுறையை உங்கள் தற்போதைய நிலைமை, பணம் மற்றும் நேரத்தை பொறுத்து நீங்கள் choose பண்ணுகிறீர்கள் என்பது தான்.
virgin-media-businessஇந்த 3 வணிகமுறையும் எப்பொதும் நம் அன்றாட வாழ்க்கையில் தொடரும் ஒன்று, நீங்கள் வாங்கும் பொருளிலிருந்து தூக்கி எறியும் பொருள் வரை…
அந்த 3 வியாபாரமுறைகள் இவை தான்..

WHEN START A BUSINESS PART- 8 Dos and Don’ts of Business- தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி – 8

 

தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி – 8

71.பணப்புழக்கம்

நீங்கள் ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் கையில் பணப்புழக்கம் இல்லாவிட்டால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. உங்கள் நிறுவனத்தில் பணப்புழக்கம் இருக்கிறதா, இல்லையா என்பதுதான் முக்கியம்.பெரும்பாலான தொழில்முனைவோர்கள் பணப்புழக்கத்தில் அதிக அக்கறை செலுத்துவதில்லை. அதிகப் பணப்புழக்கம் உள்ள நிறுவனங்கள் மட்டுமே அடுத்து என்ன, என்ன என்று யோசிக்கிறது.

72.எல்லா தொழில்களும் லாபம் தரக்கூடியதே!

எல்லா தொழில்களும் லாபம் தரக்கூடியதே..அது தரும் லாப சதவிகிதத்தில்தான் மாறும். முதலீடு செய்து தங்க முட்டையை எடுப்பதும், தவிட்டு முட்டையைப் பெறுவதும் நம் கையில்தான் இருக்கிறது!

73.யாரை நம்பியும் இந்தத் தொழில் இல்லை..

எந்த வேலைக்கு ஆள் இல்லையென்றாலும் அடுத்த ஆளை வைத்து அந்த வேலையைத் தொடரும் அளவுக்கு இரண்டாம் கட்டத்தில் உள்ளவர்களையும் தயார் செய்து வைத்திருக்கவேண்டும்.

74.யாரும் வரபோவதில்லை..

நீங்கள் எந்த மந்தையோடும் சேராதிருங்கள். ஏனென்றால், தொழிலில் இழப்பென்று ஒன்று வந்தால், அப்போது உங்களை மந்தையோடு சேர்ந்தவர்கள் வந்து நிற்கப் போவதில்லை.

75.வெற்றியை பகிர்ந்துகொள்….

நம்முடைய வெற்றிக்கு நாம் மட்டும் உரிமைகொண்டாடமுடியாது. வெற்றிக்கான பயணத்தில் நமக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவியவர்கள் எல்லோரையும் மறக்காமல் நினைவு கூர்வதும், அவர்களோடு அந்த வெற்றியை பகிர்ந்துகொள்வதும் அவசியம்.

76.மாற்றம் ஒன்று தான் மாற்றாதது…

எல்லா தொழில்களிலும் காலப்போக்கில் பல மாற்றங்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கும். தேவைப்பட்டால் அவற்றுக்கேற்ப நமது செயல்பாடுகளை மாற்றிக்கொண்டு தொடர்ந்து முன்னேறவேண்டும்.

77.நிறுவனத்தின் அடிப்படை தெரியவை…

ஒரு நிறுவனத்தின் அடிப்படை கொள்கைகள், நம்பிக்கைகள் என்னென்ன என்பதை நிறுவனத்தின் கடைநிலை ஊழியர்கள்வரை எல்லோருக்கும் சென்று சேரவேண்டும். அப்படி உருவாகும் இயல்பான கலாசாரம்தான், அந்நிறுவனத்துக்குப் பெரிய வெற்றிகளைத் தேடித் தரும்.

78.வாடிக்கையாளர்களால் நீங்கள் வாடிக்கையாளர்களுக்காக நீங்கள்..

நமது கடைக்குள், வாடிக்கையாளர்கள் எந்த அளவு செளகாரியமாக உணர்கிறார்களோ, அந்த அளவு அவர்கள் அதிகம் பொருட்களை வாங்குவார்கள். அவர்களை சிரமப்படுத்தாதபடி வேண்டிய வசதிகளை செய்துகொடுங்கள். ஷாப்பிங் என்பதை ஓர் உற்சாகமான அனுபவமாக மாற்றுங்கள். உங்கள் கடையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும், லாபமும் தானாக அதிகரிக்கும்.

79.Communication (தொடர்பு)..

பேச்சு, எழுத்து ,சைகை போன்றைவை பிறரை தொடர்புகொள்ளும் வழியாகும். அவை சரியானதாகவும், தெளிவானவானதாகவும் அமைய வேண்டும். பிறரை நமக்கு சாதகமாக இணங்கவைக்கும் ஆற்றல் கவனிக்கவைக்கும் ஆற்றல் போன்றவை தொழில்முனைவோருக்கு (Entrepreneurs) தேவையான பண்பாகும்.

80.தனி முத்திரை பதியுங்கள்..

தொழிலின் முத்திரை குறியீட்டை உருவாக்குங்கள். நற்பெயரை சம்பாதியுங்கள்.

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension