இது வரை நம்ம blog ல பிசினஸ் பற்றி, எப்படி தொழில் கடன் வாங்குவது, பிசின்ஸ் ப்ளான் எப்படி தயாரிப்பது, தொழிலில் நஷ்டமடைவதற்கான முக்கிய காரணங்கள் என ஒரளவுக்கு பார்த்திருபோம். இப்ப அடுத்ததா மார்கெட்டிங் பற்றி பார்க்கலாம்.
மார்கெட்டிங்னா என்ன என்பதையே நிறைய பேர் தப்பாகத்தான் புரிந்து வைத்திருக்கிறார்கள்?
1. ஒரு பொருளை விற்பனை செய்வதா...?(SELLING) இல்லை.
2. ஒரு பொருளை அல்லது சேவையை பற்றி விளம்பர படுத்துவதா...?(ADVERTISING) இல்லை.
3. ஒரு பொருளை அல்லது சேவைக்கு தேவையான மக்கள் தொடர்பை பெறுவதா...?(PUBLIC RELATIONS) இல்லை.
4. ஒரு பொருளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதா...?(AWARENESS) இல்லை.
5. ஒரு பொருளுக்கு இன்னோரு பொருள் இலவசம் என விற்பனை செய்வதா...?(FREEBIES) இல்லை
அப்ப மார்கெட்டிங்னா..?
ஒரு விசயத்தை பரிமாற்றம் செய்து நம்முடைய தேவைகளை பூர்த்தி கொள்ள நாம் கண்டறிந்த ஒரு சிறப்பான வழிமுறை தான் இந்த மார்கெட்டிங்.
இன்னும் கொஞ்சம் புரியுர மாதிரி சொல்லனும்னா..
மார்க்கெட்டிங் என்பது தனி மனிதர்களும் குழுக்களும், நிறுவனங்களும், தங்கள் தேவைகளையும்,எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து கொள்ள குறிப்பிட்ட பொருட்களை அல்லது சேவைகளைத் தயாரிப்பது, விற்பனைக்கு அளிப்பது மற்றும் பரிமாற்றம் செய்து கொள்வது ஆகியவற்றை உள்ளடக்கிய செயல்பாடு தான் இந்த மார்கெட்டிங்.
ஒரு மார்கெட்டில் விற்பவருக்கும்,வாங்குபவருக்கும் உள்ள பரிமாற்றம் என்ன என்று இப்போது பார்போம்.
![]() |
FIG Marketing & Market |

எதிர்பார்புகளையு,தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள நடக்கும் பரிமாற்றங்கள் (1. விற்பவர்களிடமிருந்து வாங்குபவர்களுக்கு - பொருட்கள், சேவைகள், இவற்றின் மூலமான நன்மைகள், 2. வாங்குபவர்களிடமிருந்து விற்பவர்களுக்கு - பணம், தகவல்கள், கருத்துக்கள்) தான் மார்க்கெட்டிங் என்று அவர் வரையறை செய்தார். (வாங்குபவர்களிடமிருந்து விற்பவர்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் மற்றும் கருத்துக்கள் தங்களைப் பற்றி, பொருட்களைப் பற்றி, சேவைகளைப் பற்றி, இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.)
ரெண்டு பக்கமிருந்தும் பரிமாறிக்கொள்ளப்படும் சங்கதிகளுக்கு ஒரு மதிப்பு உண்டு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சில சமயம் அந்த மதிப்புகளை அளவிட முடியும். சில சமயம் முடியாது. சில சமயம் ரெண்டு தரப்பும் ஒரே பொருளுக்கு வெவ்வேறு மதிப்புகள் கொண்டிருக்கும்.
இது தான் மார்கெட்டிங்....
இந்த பரிமாற்றத்தை உருவாக்க நீங்கள் பயன்படுத்தும் யுக்திகள் தான் மார்கெட்டிங் ஸ்ரெட்டெஜி (MARKETING STRATEGY). ஒரு பொருளுக்கு அல்லது சேவைக்கு ஒரு பரிமாற்றத்தை உருவாக்க நீங்கள் பயன்படுத்தும் யுக்திகள் தான் மார்கெட்டிங் ஸ்ரெட்டெஜி (MARKETING STRATEGY)
இந்த MARKETING STRATEGY ஐ பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்...
BOOK FOR YOU.....!
Make money from your Website or Blog with BidVertiser
BOOK FOR YOU.....!
Make money from your Website or Blog with BidVertiser
No comments:
Write comments