Tuesday, June 21, 2016

STRATEGIC PLANNING - ஸ்ரட்டெஜிக் ப்ளானிங்.

 


மார்கெட்டிங் ஸ்ரட்டெஜி பற்றி தெரிந்த் கொள்வத்ற்கு முன் ஸ்ரட்டெஜிக் ப்ளானிங் பற்றி தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்குறேன்.

ஸோ இந்த பகுதியில் நம்ம பார்க்க போவது 

ஸ்ரட்டெஜிக் ப்ளானிங் - STRATEGIC PLANNING


அப்படின்னா என்னனு கேட்ட்கிறீர்களா...? ஒன்றும் இல்லை.

நீங்கள் நடத்தும் கம்பெனியின் அல்லது நீங்கள் தயாரிக்கும் பொருள் அல்லது நீங்கள் தரும் சேவையின் எதிர்கால குறிக்கோள்களை நிறைவேற்ற புது யுக்திகளுடன் உங்களால் உருவாக்கபடும் திட்டம் தான் இந்த ஸ்ரட்டெஜிக் ப்ளானிங்

நீங்கள் எப்படி உங்கள் வியாபாரத்தை சந்தைபடுத்த போகிறீர்கள்?,உங்களுடைய வாடிக்கையாளர்கள் யார்?,உங்கள் வியாபாரம் அல்லது நீங்கள் தயாரிக்கும் பொருள் அல்லது நீங்கள் தரும் சேவை நிலை எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?,நிகழ்கால குறிக்கோள்களுக்கும் எதிர்கால குறிக்கோள்களுக்கும் உள்ள இடைவெளி என்ன?, என பல விசயத்திற்கு புது யுக்திகளை கையாள உருவாக்கப்படும் ப்ளான் தான் strategic planning ஸ்ரட்டெஜிக் ப்ளானிங். இன்னும் சொல்ல போனால் உங்களின் சிந்தனைக்கு தொடர்புடைய ஒரு விசயம் தான் இந்த ஸ்ரட்டெஜிக் ப்ளானிங்.

ஸ்ரட்டெஜிக் ப்ளானிங்கிற்கு முக்கியமான 10 படிகள் இருக்கு இப்ப நம்ம ஒவ்வொரு படியா ஏறலாம்.

1. CUSTOMER IDENTIFICATION - வாடிக்கையாளர்களை அடையாளம் காணுதல்.

ஒரு ப்ளாகிற்க்கு எப்படி "CONTENT IS THE KING" கோ ஒரு வியாபாரத்திற்க்கு "CUSTOMER IS THE KING". உங்களின் வியாபாரத்திற்க்கு வாடிக்கையாளர்கள் யார்? என்று அறிந்து கொள்வதும் தான்.

2. CUSTOMER NEEDS - வாடிக்கையாளர்களின் தேவை.

எந்த ஒரு பொருள் அல்லது சேவையை மக்கள் அதிகமாக விரும்புகிறார்கலோ அதற்கு தான் தேவை அதிகம். எனவே நிகழ்கால மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களின் எதிர் பார்ப்புகள் என்னென்ன, என்ன தேவை என்பதை அறிந்து கொள்வது தான்.

3. CUSTOMER POSITION - வாடிக்கையாளர்களின் நிலை.

வாடிக்கையாளர்களின் நிலையறிந்து அதற்கேற்றவாறு பொருள் உற்பத்தி மற்றும் சேவையை வழங்குதல் தான். மக்கள் வசிக்குமிடம், அங்கு நிலவும் பொருளாதார பிரச்சனைகள், என அனைத்தையும் பற்றி தெரிந்து கொள்ளுதல்.

4. CUSTOMER RETENTION - வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுதல்.

சிறந்த சேவை அல்லது பொருளின் தரம் இவைதான் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்கு முக்கிய காரணிகள். இவை மற்றுமின்றி வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள சிறந்த மார்கெட்டிங் யுக்திகளை உருவாக்குதல்.

5. PREDICT THE FUTURE - எதிர்காலத்தை கணித்தல்.

உங்கள் நிறுவனத்தின் எதிர்காலம் நீங்கள் வழங்கும் ப்ரொடெக்ட் அல்லது சேவை பொறுத்து எப்படி அமையும் என்பதை கணித்தல்.

6. SWOT ANALYSIS - ஸ்வோட் பகுப்பாய்வு.
பலம்,பலவீனம்,வாய்ப்பு,அச்சுருத்தல் இவைகளை பற்றி தெரிந்து கொள்ளுதல்.  

7. ALIGNMENT - வரிசைப்படுத்துதல்.

உங்கள் நிறுவனத்தின் விதிகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப உங்களின் திட்ட அறிக்கைகளை வரிசைப்ப்டுத்துதல்.

---------------------AD---- MONITIZE YOUR WEB SITE WITH ADVIUZ----AD----------------------
8. QUALITY - தரம்.

தேவை இருக்குமிடத்தில் ஒரு பொருளுக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். அந்த இடத்தில் ஒரு பொருளின் அல்லது சேவையின் தரம் முக்கிய பங்குவகிக்கிறது. இந்த தரம் தான் உங்கள் நிறுவனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. 

9. MARKETING - சந்தைப்படுத்துதல்.

சரியான பொருள் அல்லது சேவையை,சரியான இடத்தில்,சரியான நேரத்தில்,சரியான விலையில் கொடுப்பது தான் சந்தைபடுத்துதலில் மிக முக்கியம். 

10. IMPLEMENTATION - செயல்படுத்துதல்.

பட்ஜெட் , மார்கெட்டிங் மதிப்பீடுகள், திட்ட அறிக்கைகள், தகவல் திரட்டுதல், ஸ்ரட்டெஜிக் ப்ளானிங் மூலமாக வரும் ரிசல்ட் ஆகியவற்றை தயாரித்தல்

நான் ஒரு blog படிச்ச கதைய வச்சு இப்ப ஸ்ரட்டெஜிக் ப்ளானிங்கை புரிய வைக்கிறேன். அந்த கதைய படிச்ச பிறகு தான் ஸ்ரட்டெஜிக் ப்ளானிங்கை எழுதனும்னு தோன்றியது.

சரி கதைக்கு வருவோம்...

ஒரு அமெரிக்கக் காலணி நிறுவனம், தங்கள் நிதி அலுவலரை (Financial Officer) பசிபிக் கடலில் பழங்குடியினர் வாழும் ஒரு தீவில், தங்கள் தயாரிப்புகளை விற்க சாத்தியமுண்டா என்று ஆராய்ந்து வர அனுப்பி வைத்தது. அவர் சில தினங்கள் கழித்துப் பின்வருமாறு தகவல் அனுப்பினார்:
"இந்தத் தீவில் யாருமே காலணி அணிவதில்லை. எனவே நாம் எதிர்பார்க்கும் சந்தை இங்கு கிடையாது." 

இத்தகவலை உறுதி செய்து கொள்ள தங்கள் விற்பனை அலுவலரை (Sales Officer) அதே தீவுக்கு அனுப்பி வைத்தது அந்தக் காலணி நிறுவனம். போய்ச் சேர்ந்து ஒரு வாரம் கழித்து அவர் அனுப்பிய தகவல்:
"இந்தத் தீவில் தற்போது யாருமே காலணி அணிவதில்லை. நமது தயாரிப்புகளை அமோகமாக விற்க அருமையான வாய்ப்பு இருக்கிறது. உடனடி நடவடிக்கை தேவை." 

இரு வித தகவல்கள் கிடைக்கப் பெற்றதால் நிலைமைகளைச் சரியாக அறிந்து வர மார்க்கெட்டிங் அலுவலரை (Marketing Officer) அனுப்பி வைத்தது நிறுவனம். இரண்டு வாரங்கள் தீவில் கழித்துவிட்டு அவர் அளித்த அறிக்கையின் சாராம்சம்:
"இங்கு மக்கள் யாரும் காலணி அணிவதில்லை. ஆயினும் இவர்களது கால்கள் மோசமான நிலையில் இருப்பது கண்கூடு. காலணிகள் மூலம் இவர்களுக்கு நிச்சயம் நல்ல பயன் கிடைக்கும். ஆனால், இந்தத் தீவில் வாழ்வோரின் கால்கள், இயல்பை விடச் சிறியதாக இருப்பதால், முதலில் நாம் நமது தயாரிப்புகளைச் சற்று மாற்றியமைக்க நேரும். மேலும் காலணி அணிவதின் பயன்கள் குறித்து இவர்களிடம் விளக்க சரியான திட்டங்களும் தேவை. இந்தப் பழங்குடியினரின் தலைவரது நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் பெறுவது அவசியம். மேலும் இவர்களுக்குப் பணம் என்றால் என்னவென்று தெரியவில்லை. ஆனால் தங்கள் தீவில் விளைகின்ற அன்னாசிப் பழங்களைக் காலணிகளுக்குப் பதிலாகப் பரிமாற்றம் செய்து கொள்ள இவர்கள் முன் வரக் கூடும். நல்ல தரமான பழங்கள். மூன்று வருடங்களுக்கு இங்கு நமக்கு இருக்கும் விற்பனை வாய்ப்பு, விற்பனைக்காக மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளுக்கான செலவுகள், அன்னாசிப் பழங்களை நமக்குப் பழக்கமான முன்னணி சூப்பர் மார்க்கெட் நிறுவனத்திடம் விற்பதற்கான திட்டம் ஆகியவற்றுக்கான மதிப்பீட்டை இத்துடன் இணைத்துள்ளேன். அதன் அடிப்படையில் நமக்கு 30% லாபம் கிட்டும் என்று நான் அனுமானிக்கிறேன். இது நமது நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட லாப சதவீதம் என்பதால் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கலாம் என்பது எனது சிபாரிசு." 

இங்கு நிதி அலுவலர், விற்பனை அலுவலரிடமிருந்து மாறுபட்டு, மார்க்கெட்டிங் அலுவலரின் அறிக்கையை முழுமைப்படுத்திய அம்சங்கள் எவை? 

1. தீவு மக்களின் சரியான தேவையை இனங்கண்டு கொண்டது. 
2. தேவையைப் பூர்த்தி செய்து மக்களுக்குப் பயன் தரக் கூடிய சரியான பொருளை முடிவு செய்தது. 
3. விற்பனைக்குத் துணை செய்யும் ஏனைய நடவடிக்கைகளித் திட்டமிட்டது. 
4. வரவு - செலவு, மற்றும் உத்தேச லாப மதிப்பீட்டுக்கணக்கை உருவாக்கியது 

 ஒரு தரமான மார்க்கெட்டிங் சிந்தனையானது, தேவையில் துவங்கி, விற்பனைக்கான வாய்ப்பினைக் கண்டு கொண்டு,பயன் அளிக்கும் பொருளை முடிவு செய்து, லாபம்என்னும் நோக்கத்தை அடையும் பயணமாக இருக்க வேண்டும்.

No comments:
Write comments

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension