Friday, June 24, 2016

MARKETING STRATEGIES - மார்கெட்டிங் யுக்திகள்

 

STRATEGIC PLANNING ஐ பற்றி இப்ப ஒரளவுக்கு புரிஞ்சிருக்கும் நினைக்குறேன். இந்த பகுதியிலிருந்து மார்கெட்டிங்  ஸ்ரட்டெஜி பத்தி பார்க்க ஆரம்பிக்கலாம்.
மார்க்கெட்டிங் என்பது தனி மனிதர்களும்குழுக்களும், நிறுவனங்களும், தேவைகளையும்,எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து கொள்ள குறிப்பிட்ட பொருட்களை அல்லது சேவைகளைத் தயாரிப்பது, விற்பனைக்கு அளிப்பது மற்றும் பரிமாற்றம் செய்து கொள்வது ஆகியவற்றை உள்ளடக்கிய செயல்பாடு தான்.
 மார்கெட்டிங்னு  ஒரு பகுதியில் ஒரு உதாரணத்தோடு  பார்தோம்.. ஞாபகம் இருக்கா....?? அதிலேயே மார்கெட்டிங்  ஸ்ரட்டெஜி பத்தி ஒரே ஒரு வரில சொல்லிருப்பேன்.. திரும்பவும் சொல்லுரேன்.

மார்க்கெட்டிங் ஸ்ரட்டெஜிஎன்பது தனி மனிதர்களும், நிறுவனங்களும், தேவைகளையும்,எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து கொள்ள குறிப்பிட்ட பொருட்களை அல்லது சேவைகளைத் தயாரிப்பது, விற்பனைக்கு அளிப்பது மற்றும் பரிமாற்றத்தை ஏற்படுத்த கையாளும் யுக்திகள் தான் MARKETING STRATEGY.
யுக்தி சொன்ன உடனே எனக்கு இப்ப Recent ஆ ஒரு கதை படித்தேன் அத வைத்து MARKETING STRATEGY. ஐ பற்றி விளக்கமா சொல்லுரென்.


தத்துவ மேதை சாக்ரடீஸ்  பத்தி ஒரளவுக்கு எல்லோருக்கும் தெரியும். அவரு கருத்துகளை மக்களிடம் சென்றடைய ஒரு விசத்தியாசமான முறையை கையாளுவர். ஒரு தெருவில் அல்லது மக்கள் கூட்டமாக உள்ள இடத்தில் பட்ட பகலில் கையில் விளக்குடன் எதையோ தேடுவாராம். மக்களும் இவர் செய்கையை பார்த்து என்ன தேடுகிறீர்கள் என  கேட்டால் அதற்க்கு  சாக்ரடீஸ் நான் இங்கு நல்ல மனிதர்களை தேடுகிறேன் என்று சொல்லி மக்கள் தன் பக்கம் ஈர்த்து தன் கருத்துகளை பரப்புவராம். இது தான் பழைய கால மார்கெட்டிங் யுக்தி,

இன்னொரு உதாரணம் தற்போதைய ஆளும் கட்சி எடுத்துக்கொள்ளுங்கள். எங்கும் எதிலும் அம்மாவின் படம் தான். இது சிரிக்க வேண்டிய விசயம் அல்ல... சிந்திக்க வேண்டிய விசயம். எங்கும் எதிலும் அம்மாவின் படம் பெருமைக்கூரிய விசயம் என்றாலும் இதுவும் ஒரு வித மார்கெட்டிங் யுக்தியே...

இதுல என்ன மார்கெட்டிங் யுக்தி இருக்குனு... கேட்க்கிறீர்கள் தானே...? 

ஒரு விசயத்தை திரும்ப திரும்ப பேசும் பொழுதும் ,பார்க்கும் பொழுதும் அந்த விசயம் நம் மனதுக்குள் பதிய வைக்குற முறை தான்.

சும்மா நினைச்சு பாருங்கள்...! மிக்ஃஸி,க்ரைன்டர்,ஃபேன், மடிக்கணிணி என அனைத்திலும் அம்மா படம் தான்.

இப்படி அரசியலில்இருந்து எல்லாவ்ற்றிக்கும் முக்கியமானது இந்த மார்கெட்டிங்  யுக்தியே.....


இன்னோரு நல்ல எஃஸாம்பில் பிச்சைகார்ன் படத்துல வர டயாலக் 

"இப்ப நடிக்குற ஹீரோ முதல் படத்துல மொக்கையா இருப்பங்க.. 3வது,4வது படத்துலயே ஆடியன்ஸே இவன் தான்டா நம்ம ஹீரோன்னு பழகிகுறங்கள்ல அந்த கேப்ல ஹீரோ அழகாகிட்டர்னு அர்த்தமா.. எல்லாமே ஆடியன்ஸ மைன்ட் செட் பண்ணுரதுதான்"
இந்த மைண்ட் செட் பண்ண தெரிந்த வித்தகார்ன் தான் மார்கெட்டிங் கிங்
மார்கெட்டிங்  யுக்தி....மாபெரும் சக்தி.....

எனக்கு தெரிந்த மார்கெட்டிங்  யுக்திகளை ஒவ்வொன்றாக அடுத்தடுத்த பதிவில் பார்போம்..........

No comments:
Write comments

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension