Sunday, June 26, 2016

CLOSED RANGE MARKETING(CRM) - மார்கெட்டிங் ஸ்ரட்டெஜி

 

மார்கெட்டிங் என்பது ஒரு நிறுவனத்தின் அல்லது தனி மனிதனின் சிந்தனை செயல் தான் என்று போன பதிவில் பார்த்தோம் அல்லவா...?

இந்த பகுதியில் உலகில் என்னென்ன மார்கெட்டிங் ஸ்ரட்டெஜி இருக்கு... அதை எப்படி எப்படி தனக்கு சாதகமா பயன்படுத்தி சக்சஸ் ஆகுறங்ககுறத பத்தி இந்த பதிவிலிருந்து பார்க்கலாம்.
சரி...... ஒரு பொருள் அல்லது ஒரு சேவையை எவ்வாறு அறிமுகப்படுத்துகின்றனர்...? எல்லாருக்கும் தெரிந்த சாதாரண மார்கெட்டிங் அடிப்படை யுக்திகளிலிருந்து பார்க்கலாம்..
  1. INBOUND - கண்காட்சி மூலம் மார்கெட்டிங் செய்தல்.
  2. OUTBOUND - TV,Email யில் விளம்பரப்படுத்துதல்.
  3. ONLINE- பேஸ்புக்,டிவிட்டர்,லிங்க்டு இன்,ட்ம்பள்ர்,கூகிள் ப்ளஸ் போன்ற சமுக வலைதளங்களில் மார்கெட்டிங் செய்தல்.
  4. CTA (CALL TO ACTION)- மொபைலுக்கு கால் செய்து மார்கெட்டிங் செய்தல்.
  5. EMAIL- நம் மெயிலுக்கு சில விபரங்களை அனுப்பி மார்கெட்டிங் செய்தல்.
இந்த மாதிரி ஒரு சில மார்கெட்டிங் ஸ்ரட்டெஜி தான் நமக்கு தெரியும்.. ஆனால் இதையும் தாண்டி நிறைய மார்கெட்டிங் ஸ்ரட்டெஜி இருக்கு..

அதுல இப்ப CLOSED RANGE MARKETING ஐ பற்றி இப்ப நாம் பார்க்கலாம்.

CLOSED RANGE MAKETING (CRM) - அருகாமையில் சந்தைப்படுத்துதல்.


இதை PROXIMITY MARKETING OR HYPER LOCAL MARKETING என்று சொல்லுவார்கள். வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் சந்தைப்படுத்துதல். இந்த மார்கெட்டிங் யுக்தியில் வைஃபை அல்லது ப்ளூடூத் மூலமாக மார்கெட்டிங் செய்வர்கள். 




இந்த  மார்கெட்டிங் யுக்தி பெரும்பாலும் பெரிய நிறுவனங்களாலும்  மக்கள் அதிகமாக கூடும்  இடத்தில் செயல்படுத்துவார்கள். 
அது
  1. விமான நிலையங்கள் - AIRPORTS
  2. வங்கிகள் - BANKS
  3. பல்கலைகழகங்கள் - UNIVERSITIES
  4. கல்லுரிகள் - COLLEGES
  5. உணவு விடுதிகள் - HOTELS & RESTAURANTS
  6. கேளிக்கை விடுதிகள்- CLUBS.
  7.  பன்னாட்டு நிறுவனங்கள் - MNC's.
கூட இருக்கலாம்.

கம்பெனி பற்றிய PROMOTION VIDEOS, TEXT MESSAGES, OFFERS ஐ யாரெல்லம் இந்த WI-FI , BLUETOOTH டெக்னாலஜியில் சேர்ந்து இருப்பவர்களுக்கு அனுப்புதல்

இந்த மாதிரியான இடங்களில் வைஃபையில் மொபைலிலோ அல்லது கணிணியிலோ சேரும்போது அதற்கேற்றவாறு விளம்பரங்கள் அல்லது வெப்சைட்கள் தானாகவே உங்கள் மொபைலில் அல்லது கணிணியில் தெரியுமாறு செய்து மார்கெட்டிங் செய்வது தான் இந்த CLOSED RANGE MAKETING STRATEGY.. 

நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இதை FACEBOOK, GOOGLE PLUS, TWITTER, LINKED IN, TELEGRAM, WHATSAPP என அனைத்திலும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

எங்களை தொடர....
  

No comments:
Write comments

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension