ஹாய்…! இந்த பகுதியில் நம்ம
நடைமுறையில் வியாபாரமுறைகளை பத்தி பார்க்கலாம். எந்த ஒரு விசயத்துக்கும்
கண்டிப்பா ஒரு method இருக்கும்.. அது போல பிசினஸ்க்கும் 3 வகையான
வியாபாரமுறை இருக்கு..
ஒரு
தொழில் தொடங்குவதற்கு முன் ஒரு நபர் செய்யும் புத்திசாலியான விசயம் 3
வகையான வியாபாரமுறையில் எந்த வகையான வணிகமுறையை உங்கள் தற்போதைய நிலைமை,
பணம் மற்றும் நேரத்தை பொறுத்து நீங்கள் choose பண்ணுகிறீர்கள் என்பது
தான்.

அந்த 3 வியாபாரமுறைகள் இவை தான்..
- பாரம்பரிய வியாபாரமுறை (Traditional Business or Traditional Marketing)
- நேரடி வியாபாரமுறை (Direct Selling business or MLM).
- ப்ராச்சைஸிங்.(Franchising).
இப்போ முதல்ல பார்க்கபோவது
- பாரம்பரிய வியாபாரமுறை
பாரம்பரிய வியாபாரமுறையை பொருத்த வரை
கஸ்டமர் எந்த ஒரு பொருள் வாங்கினாலும் சரி அது MANUFACTURER டம் இருந்து
நேரடியாக கிடைப்பதில்லை.
இடையில் சேமிப்பு வைத்திருப்பவர்
(STOCKIST), விநியோகஸ்தர் (DISTRIBUTOR), மொத்த வியாபாரி (WHOLESALER),
சில்லறை வர்த்தகர் (RETAILER) என அனைவரின் கை மாறி தான் கஸ்டமரை
வந்தடைகிறது. நீங்கள் வாங்கும் சிகரெட்டிலிருந்து அனைத்து மளிகை
பொருட்களும் இதில் அடங்கும்.
உங்களில் நிறைய பேர் MLM meeting அட்டெண்ட்
பண்ணிருப்பீர்கள். இதுல அவங்க பிசின்ஸ் பிக்அப்புக்காக மத்த
வியாபாரமுறைகளை பற்றி நிறைய குறைகளை சொல்லுவார்கள். ஆனால் அதிகபடியான பணம்
ஒருவரிடம் மட்டும் போய் சேருகிறது என்றால் அது MLM வியாபாரமுறையில் தான்.
சரி இப்போது நாம் TRADITIONAL BUSINESS எப்படி நடக்கிறது என்பதை பார்போம்.

உதாரணத்திற்க்கு உற்பத்தியாளர்(Manufacturer) ஒரு பொருளை 40 ருபாய்க்கு உற்பத்தி செய்கின்றார் என் வைத்துக்கொள்வோம்.
உற்பத்தியாளரிடமிருந்து சேமிப்பு
வைத்திருப்பவர்(Stockist) பொருட்களை 40 ருபாய்க்கு வாங்கி 5 ருபாய்
லாபத்துடன் விநியோகஸ்தரிடம்(Distributor) 45 ருபாய்க்கு விற்பனை
செய்கிறார்.
இந்த விநியோகஸ்தர் 15 ருபாய் லாபத்துடன் 60 ருபாய்க்கு மொத்த வியாபாரியிடம்(wholesaler) விற்பனை செய்கிறார்.
மொத்த வியாபாரி 15 ருபாய் லாபத்துடன் 75 ருபாய்க்கு சில்லறை வர்த்தகருக்கு (RETAILER) விற்பனை செய்கிறார்.
சில்லறை வர்த்தகர் (RETAILER) 15 ருபாய்
லாபத்துடன் 90 மற்றும் உற்பத்தியாளர் பொருளை மக்களிடம் கொண்டு
சேர்ப்பதற்காக விளம்பரங்களுக்கு செய்யும் 10 ருபாய் சேர்த்து 100
ருபாய்க்கு அந்த பொருள் மக்களை சென்று அடைகிறது.
அதாவது இதில் விலையை நிர்ணயிப்பது,
சேமிப்பு வைத்திருப்பவர் (STOCKIST),விநியோகஸ்தர் (DISTRIBUTOR),மொத்த
வியாபாரி(WHOLESALER),சில்லறை வர்த்தகர் (RETAILER) என அனைவரின் வரி
கட்டுவது எல்லாம் செய்வது உற்பத்தியாளர் தான்..ஒரு பொருள் வாங்குகிறீர்கள்
என்றால் கண்டிப்பாக நீங்கள் வரி செலுத்தி தான் வாங்குகிறீர்கள்.
அடுத்த பதிவில் MLM….
No comments:
Write comments