Friday, May 20, 2016

BEFORE STARTING A BUSINESS PART - 4 தொழிலில் நஷ்டமடைவதற்க்கான சில முக்கிய காரணங்கள்

 

 தொழிலில் நஷ்டமடைவதற்க்கான சில முக்கிய காரணங்கள்

 நம்ம ஒரு business தொடங்குனா மட்டும் போதாது அந்த business ஐ நஷ்டம் இல்லாம கொண்டு போக தெரிஞ்சு இருக்கனும். இந்த பகுதில நான் சொல்ற காரணங்கள் தான் ஒரு business நஷ்டமடைவதற்க்கான காரணங்கள். என்னெறால் நெறய பேர் பண்ணற தப்பு இதுல தான் இந்த விசயத்தை தவிர்தாலே போதும் நம்ம business ஐ நஷ்டம் இல்லாம கொண்டு போகலாம். இதுக்கு முன்னாடி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது வெற்றி மற்றும் தோல்வியுறுபவர்களை பத்தி

தொழிலில் வெற்றி பெறுபவர் இந்த் 5 க்குள் அடங்குவர்:

குறிப்பிட்ட தொழிலில் ஈர்ப்பு ஏற்பட்டு, அது தன் சிந்தனையோட்டத்துடன் தொடர்புடையது அதாவது தன்னுடைய Innovation & Creativity மூலதனமாக கொண்டு அதில் இறங்கி, வெற்றி அடைபவர்கள்.

பரம்பரையாகச் செய்துவரும் தொழிலை குழந்தைப் பருவம் முதலே கற்று அந்தத் தொழிலை மென்மேலும் மெருகேற்றி மற்றும் புதிய நுணுக்கங்களை அறிமுகபடுத்தி வெற்றி அடைபவர்கள்.

ஒரு குறிப்பிட்ட தொழிலின் தொழிலாளியாக இருந்து அதைக் கற்று, சுயமாகச் செய்ய ஆரம்பித்து, 10 - 15 ஆண்டுகளுக்குள் அந்தத் தொழிலில் விஸ்வரூபம் எடுப்பவர்கள்.

புதிய படைப்புகளை உருவாக்கி அதை தொழிலாக ஆரம்பித்து அறிவை மூலதனமாக கொண்டு அதில் இறங்கி, வெற்றி அடைபவர்கள்.

எந்தத் தொழிலும் தெரியாது; ஆனால், என்னிடம் முதலீடு இருக்கிறது இருக்கும் முதலீட்டை வைத்து, ஃப்ரான்சைஸ் (Franchise)  பிசினஸ் செய்து வெற்றி அடைபவர்கள்.(ஃப்ரான்சைஸ் (Franchise) பிசினஸ் பற்றி ஒரு தனி பதிவில் விரிவாக பார்கலாம்.)


உலகில் எந்த ஒரு சக்சஸிவ் பெர்சன எடுத்து கொள்ளுங்கள் அது பில்கேட்ஸ், ஸ்டிவ் ஜாப்ஸ், டென்னிஸ் ரிட்ச்சி, அம்பானி ப்ரதர்ஸ், ஏன் உங்க ஊருல உள்ள சக்சஸிவ் பெர்சன் இப்படி யார எடுத்துகிட்டாலும் அவங்க கண்டிப்பா இந்த 4 வந்துருவங்க. அதுக்காக நான் இவர போல, அவர போல பண்ணபோரேனனு டெசிஸ்ன் எடுத்திங்கனா அது உங்க முட்டாள் தனம். உங்களுக்குனு ஒரு வழிய உருவாக்குங்க அத நோக்கி செயல்படுங்க.. (ஏன்னா நானும் அந்த மாதிரி இவர போல, அவர போல பண்ணபோரேனனு பண்ணி நெறய ப்ராப்லம்ல மாட்டி ரெக்கவர் ஆகுரத்து குள்ள படாத பாடு பட்டுடேன்.)


தொழிலில் தோல்வியுறுபவர் இந்த் 6 க்குள் அடங்குவர்:

தன் குடும்பத் தொழிலில் ஈடுபட்டு, ஆனால் தனக்கு இந்தத் தொழில் பிடிக்கவில்லை என்று புலம்பிக்கொண்டே தொழில் செய்து அதில் தேக்கநிலையிலே இருப்பவர்கள்.

முதலீடு எனக்கு பிரச்னை இல்லை. புதுசா என்ன தொழில் செய்யலாம், சொல்லுங்க!’ என்று மூன்று வருடத்திற்கு ஒருமுறை வெவ்வேறு தொழில் செய்பவர்கள்.

எனக்கு கடன் ஜாஸ்தி ஆயிடுச்சி! நான் தொழில் செய்து கடன் அடைக்கப்போறேன் என்று கிளம்பி, சில ஆண்டுகளுக்குள் மீண்டும் சம்பளத்துக்கே வேலைக்குச் செல்பவர்கள்.

இந்தத் தொழில் சூப்பராப் போகுதாமே! நானும் அதுல ஒரு கடை ஆரம்பிக்கிறேன்’ என்று இலக்கு இல்லாமல் செல்பவர்கள்.

எந்தத் தொழிலும் தெரியாது; ஆனால் என் ஃப்ரெண்டு பண்ணுரான் நானும் ஆரம்பிக்கிறேன்’ என்று இலக்கு இல்லாமல் செல்பவர்கள்.

வேலை செய்யப் பிடிக்கவில்லை; அதனால் பிஸினஸ் செய்யப் போகிறேன்' என்று சொல்லி தொழிலில் இறங்குகிறவர்கள், வெற்றி பெறுவது கடினம்தான். 


அதே போல செய்ய நினைக்கும் தொழில் பற்றிய முழுமையான அறிவு, தெளிவான நம்பிக்கை இல்லாமல் தொழிலில் இறங்குகிறவர்களுக்கும் தோல்வி நிச்சயம்தான். இந்த மாதிரி இருப்பவர்கள்... என்ன செலவு பண்ணுனாலும் கடைசியில் தோல்வி தான் இவங்க எந்த மாதிரி தப்பு பண்ணுரங்கனு பார்போம்.


§  போதிய நிர்வாக அனுபவம் இல்லாமை.

§  தொழிலை நடத்துவதற்குரிய முறையான திட்டம் மற்றும் எவ்வித எதிர்கால திட்டமும் தீட்டாமை.

§  உற்பத்தி செய்யும் பொருட்களின் தரத்தில் உள்ள குறைபாடு.

§  எவ்வித குறிக்கோள் இன்றி செயல்படுதல்.

§  உற்பத்தி செய்யும் பொருள் பற்றிய முழு விவரங்களும் தெரியாமல் இருத்தல்,

§  பொருட்களுக்கான தேவை இருந்தும் உற்பத்தியை பெருக்க எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருத்தல்,

§  உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலுக்கு தேவையான தொழில்நுட்பம் பற்றிய போதிய அறிவு இல்லாமை.

§  உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்த தெரியாமை,

§  விற்பனையில் உள்ள குறைபாடு மற்றும் விற்பனையை அதிகரிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருத்தல்,

§  கணக்கு, வழக்குகள் முறை சரியில்லாதிருத்தல்,

§  முறையான பட்ஜெட் தயாரிக்காதது,

§  நுகர்வோர் மற்றும் பொருட்களை வாங்குபவருக்கு ஒழுங்கான சேவைகள் அளிக்காமல் இருத்தல்,

§  தேவைக்கு மேற்பட்டத் தொகையை இயந்திரம், நிலம், கட்டிடம் போன்ற அசையாச் சொத்துகளில் முடக்கி வைத்தல்,

§  மூலப்பொருட்கள் தட்டுபாடு,

§  கையிருப்பு சரக்குகளில் சரியாக கவனம் செலுத்தாமல், அதனால் நஷ்டம் ஏற்படுதல்,

அதே போல செய்ய நினைக்கும் தொழில் பற்றிய முழுமையான அறிவு, தெளிவான நம்பிக்கை  மறறு செய்யக் கூடாதவற்றைத் தவிர்த்தாலே, நஷ்டமும், தேக்கமும் இல்லாமல் தொழிலைச் செய்யலாம்.



அடுத்த பதிவில் நம்ம பிசின்ஸ் ப்ளானிங் எப்படி பண்ணுறதுனு பத்தி பார்போம்.

TO BE CONTINUED......

No comments:
Write comments

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension