Saturday, May 21, 2016

BEFORE STARTING A BUSINESS PART - 5 Background Work - எந்த ஒரு விசயனாலும் ப்ளான் பண்ணி பண்ணும்....

 

எந்த ஒரு விசயனாலும் ப்ளான் பண்ணி பண்ணும்....

நமக்கு பொருத்தமான தொழிலை தேர்தெடுத்தாச்சு..... நெக்ஸ்ட் ப்ளானிங் தான்.




ஒரு நல்ல தொழில் செய்யனும்னு நினைகுறவங்க.. கண்டிப்பாஒரு நல்ல ப்ளானோட தான் ஆரம்பிப்பாங்க.


நம்ம பண்ணுற ப்ளான் தான் நம்ம பிசின்ஸ்க்கு நம்ம விதைக்குற விதை.

உதாரணத்துக்கு நம்ம ஒரு தொட்டில செடி வளர்க்குரோம்.
என்ன விசயங்களாம் பண்ணுரோம்...?
1.விதை விதைப்போம். (planing & execution)
2.துளிர் விடுற வரை கொஞ்சம் கவனமா பார்போம். (caring & Performance)
3.கொஞ்சம் வளர்ந்த உடனே அத அழகான இடதுல மதவங்களுக்கு தெரியுர மாதிரி வைபோம். (Marketing).
4.எதும் ப்ராப்லெம்னா அது தகுந்த மருந்து கொடுப்போம். (Risk Management,Profit & Loss)
5.நல்லா வளர்ந்த உடனே அதோட பலன அனுபவிப்போம். (Business achievements)

அது நம்ம எதிர்காலத்துல என்ன பண்ணபோறோம்...
இப்ப விதை விதைப்போம் அதாவது நம்ம ப்ளானிங் எப்படி பண்ணுறதுனு பார்போம்.

1.நான் முதல் போஸ்ட்ல சொன்ன SWOT-பகுபாய்வு (SWOT - analysis) .

2.ஸ்வோட் அனலிஸிஸ் முலமா நீங்க செலக்ட் பண்ணுன தொழில்(CHOOSING RIGHT BUSINESS).

3.செக்லிஸ்ட்(CHECK LIST PREPARATION) - நீங்க செலக்ட் பண்ணுன தொழிலுக்கு எதுலாம் தேவை எதுலாம் தேவையில்லைகுறத,செல்ப் அசஸ்மென்ட் பண்ணீகோங்க.

4.பிசின்ஸை ஆரம்பிக்குற்த்துக்கு இன்வெஸ்ட்மெண்ட்(START UP COST ESTIMATION) எவ்வளவு தேவைகுறத எஸ்டிமெட் பண்ணுங்க.... 

5.நீங்க செலக்ட் பண்ணுன தொழிலுக்கு மார்கெட் லெவல்(MARKET LEVEL RESEARCH OR ANALYSIS) எப்படி இருக்குனு அனலய்ஸ் பண்ணுங்க.

6.யாரெல்லாம் என்னோட கஸ்டம்ர்ஸ், அவங்கல எப்படி கவர் பண்ணுறதுனு  அனலய்ஸ் பண்ணுங்க.(CUSTOMER ANALYSIS)

7.யாரெல்லாம் என்னோட போட்டியாளர்கள்(COMPETITOR ANALYSIS), அவங்க எப்படி கஸ்டம்ர்ஸை கவர் பண்ணுறங்க, பிசினஸை எப்படி சக்சஸ்ஃபுல்லா கொண்டுபோறாங்க, அவங்கலளோட மார்கெட்டிங் யுக்திகள் என்னென்ன பத்தி அனலய்ஸ் பண்ணுங்க

8.நீங்க செலக்ட் பண்ணுன தொழிலிலை எந்த இடத்துல (CHOOSING RIGHT ANALYSIS)வைக்கலாம், அந்த இடத்துல வச்சா எதிர்காலத்துல எப்படி இருக்கும் அத பத்தி அனலய்ஸ் பண்ணுங்க.

9.இந்தத் தொழில் மூலம் மாதத்துக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்கிற தோராயமான கணக்கு வேண்டும். இதற்கு டி.எஸ்.சி.ஆர்.(Debt-Service Coverage Ratio என்பதன் சுருக்கமே டி.எஸ்.சி.ஆர்) என்கிற விகிதத்தை நிர்ணயம் செய்யுங்கள் இது நீங்கள் Business Loan வாங்குற பட்சத்தில் உங்களுக்கு உதவியாக இருக்கும் (D.S.C.R CALCULATION)

இது மட்டும் இல்ல உங்கலோட பிசினஸ்க்கு ஏத்த மாதிரி ப்ளானிங் பண்ணணும்,அது Product Manufacturing,Sales & service, இப்படி எந்த பிசினஸா இருந்தாலும் சரி ப்ளானிங் ரொம்ப முக்கியம்(BUSINESS PLANNING).
இப்ப ஒரளவுக்கு ப்ளான் பண்ணியச்சு,

நெக்ஃஸ்ட் பிசின்ஸ் ப்ளான் டாக்குமென்டாக ஃப்ரிபேர் பண்ண்னுரதுனு ரொம்ப யுஸ்ஃபுல்லா இருக்கும்.

ஒரு .பிசின்ஸ் ப்ளான் டாக்குமென்ட்ல முக்கியமாக இருக்க வேண்டியவை

1.Objectives
2.Vision & Mission
3.Startup Executive Summary
4.Assumed keys to success.
5.Customer Analysis.
6.Competitor Analysis.
7.Market Analysis.
8.Infrastructure Analysis.
9.Startup cost & Requirements.
10.Management Summary
11.Others.

உங்களோட பிசின்ஸ்க்கு தகுந்த மாதிரி டாக்குமென்ட் ஃப்ரிபேர் பண்ணுங்க.... நான் விரைவில் ஒரு Sample Business plan template உங்களுக்கு google drive ல பதிவேற்றுகிறேன்.. அது ஒரு மாடல் தான் அதே மாதிரி ஃப்ரிபேர் பண்ணனும்னு அவசியம் இல்லை.உங்கலளுக்குனு ஒரு Style இருக்கும் அந்த style ல பண்ணுங்க.. 

No comments:
Write comments

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension