Sunday, June 12, 2016

WHEN START A BUSINESS PART- 8 Dos and Don’ts of Business- தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி – 8

 

தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி – 8

71.பணப்புழக்கம்

நீங்கள் ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் கையில் பணப்புழக்கம் இல்லாவிட்டால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. உங்கள் நிறுவனத்தில் பணப்புழக்கம் இருக்கிறதா, இல்லையா என்பதுதான் முக்கியம்.பெரும்பாலான தொழில்முனைவோர்கள் பணப்புழக்கத்தில் அதிக அக்கறை செலுத்துவதில்லை. அதிகப் பணப்புழக்கம் உள்ள நிறுவனங்கள் மட்டுமே அடுத்து என்ன, என்ன என்று யோசிக்கிறது.

72.எல்லா தொழில்களும் லாபம் தரக்கூடியதே!

எல்லா தொழில்களும் லாபம் தரக்கூடியதே..அது தரும் லாப சதவிகிதத்தில்தான் மாறும். முதலீடு செய்து தங்க முட்டையை எடுப்பதும், தவிட்டு முட்டையைப் பெறுவதும் நம் கையில்தான் இருக்கிறது!

73.யாரை நம்பியும் இந்தத் தொழில் இல்லை..

எந்த வேலைக்கு ஆள் இல்லையென்றாலும் அடுத்த ஆளை வைத்து அந்த வேலையைத் தொடரும் அளவுக்கு இரண்டாம் கட்டத்தில் உள்ளவர்களையும் தயார் செய்து வைத்திருக்கவேண்டும்.

74.யாரும் வரபோவதில்லை..

நீங்கள் எந்த மந்தையோடும் சேராதிருங்கள். ஏனென்றால், தொழிலில் இழப்பென்று ஒன்று வந்தால், அப்போது உங்களை மந்தையோடு சேர்ந்தவர்கள் வந்து நிற்கப் போவதில்லை.

75.வெற்றியை பகிர்ந்துகொள்….

நம்முடைய வெற்றிக்கு நாம் மட்டும் உரிமைகொண்டாடமுடியாது. வெற்றிக்கான பயணத்தில் நமக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவியவர்கள் எல்லோரையும் மறக்காமல் நினைவு கூர்வதும், அவர்களோடு அந்த வெற்றியை பகிர்ந்துகொள்வதும் அவசியம்.

76.மாற்றம் ஒன்று தான் மாற்றாதது…

எல்லா தொழில்களிலும் காலப்போக்கில் பல மாற்றங்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கும். தேவைப்பட்டால் அவற்றுக்கேற்ப நமது செயல்பாடுகளை மாற்றிக்கொண்டு தொடர்ந்து முன்னேறவேண்டும்.

77.நிறுவனத்தின் அடிப்படை தெரியவை…

ஒரு நிறுவனத்தின் அடிப்படை கொள்கைகள், நம்பிக்கைகள் என்னென்ன என்பதை நிறுவனத்தின் கடைநிலை ஊழியர்கள்வரை எல்லோருக்கும் சென்று சேரவேண்டும். அப்படி உருவாகும் இயல்பான கலாசாரம்தான், அந்நிறுவனத்துக்குப் பெரிய வெற்றிகளைத் தேடித் தரும்.

78.வாடிக்கையாளர்களால் நீங்கள் வாடிக்கையாளர்களுக்காக நீங்கள்..

நமது கடைக்குள், வாடிக்கையாளர்கள் எந்த அளவு செளகாரியமாக உணர்கிறார்களோ, அந்த அளவு அவர்கள் அதிகம் பொருட்களை வாங்குவார்கள். அவர்களை சிரமப்படுத்தாதபடி வேண்டிய வசதிகளை செய்துகொடுங்கள். ஷாப்பிங் என்பதை ஓர் உற்சாகமான அனுபவமாக மாற்றுங்கள். உங்கள் கடையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும், லாபமும் தானாக அதிகரிக்கும்.

79.Communication (தொடர்பு)..

பேச்சு, எழுத்து ,சைகை போன்றைவை பிறரை தொடர்புகொள்ளும் வழியாகும். அவை சரியானதாகவும், தெளிவானவானதாகவும் அமைய வேண்டும். பிறரை நமக்கு சாதகமாக இணங்கவைக்கும் ஆற்றல் கவனிக்கவைக்கும் ஆற்றல் போன்றவை தொழில்முனைவோருக்கு (Entrepreneurs) தேவையான பண்பாகும்.

80.தனி முத்திரை பதியுங்கள்..

தொழிலின் முத்திரை குறியீட்டை உருவாக்குங்கள். நற்பெயரை சம்பாதியுங்கள்.

No comments:
Write comments

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension