Sunday, June 12, 2016

WHEN START A BUSINESS PART- 7 Dos and Don’ts of Business- தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி – 7

 

தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி – 7

61.முதலீட்டாளர்கள் மிகவும் தேவை.

நம் தொழிலை விரிவுபடுத்த முதலீடு மிக அவசியம். நம் தொழிலை நம்பி முதலீடு செய்யக்கூடியவர்களைத் தேடிக் கண்டறிவதும், அவர்களுக்கு நம்பிக்கையூட்டும்வகையில் நமது கனவை விவரித்து திருப்திப்படுத்துவதும் மிக முக்கியம்.

62.வாடிக்கையாளரே வியாபாரிகள்..

லாபத்தின் ஒரு பகுதியை, உங்களது வாடிக்கையாளர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள் (PROFIT SHARING). இதனால் உங்கள் லாபம் குறையாது, லாபம் கூடும்!

63.தரம்+சேவை = கூடுதல் லாபம்..

மார்கெட்டிங் ஜாலங்கள், விளம்பரத் தந்திரங்கள் போன்றவற்றைவிட, தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகள்தான் ஒரு நிறுவனத்திற்கு அதிகப் புகழை, கூடுதல் லாபத்தை பெற்றுத்தரும்.

64.உழைப்புதான் எல்லா வாய்ப்புகளையும் திறக்கும் சாவி.

கடினமாக உழைப்பதை விட சாமர்த்தியமாக உழைக்க கற்றுகொள்ளுகங்கள்.

65.காப்பியடிப்பது தவறே இல்லை..

அடுத்தவர்கள் செய்கிற நல்ல விஷயங்கள்,லாபம் ஈட்டும் முறைகள், தொழில் உத்திகளை கவனித்து, அவற்றை தாராளமாக பின்பற்றுங்கள். இந்த விஷயத்தில் காப்பியடிப்பது தவறே இல்லை.

66.இப்போ இப்போ இப்போ ராமசாமியாய் இருங்கள்..

ஒரு நல்ல யோசனையை, உடனே செயல்படுத்துங்கள். ஆனாலும் அதைச் யோசித்து செயல்பட மறவாதீர்கள்.

67.நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவும்…

நிறுவனங்களின் பொறுப்பு வெறும் விற்பனையோடு மட்டும் முடிந்துவிடவில்லை. நிறுவனத்தில் இயங்கும் எல்லா பிரிவுகளும் சிறப்பாகச் செயல்பட்டால்தான் ஒட்டுமொத்த வெற்றியும் லாபமும் அதிகரிக்கும்.

68.OLD IS GOLD.

தொழிலில் வெற்றிபெருவதற்குப் ‘பழைய’ அந்தகால கொள்கைகள், நம்பிக்கைகளெல்லாம் சரிபடாது என்று நினைக்காதீர்கள். அவை எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியவை.

69.எங்கிருந்து ஆட்களைத் தேர்வு செய்யவேண்டும்..

உறவுகளின் சிபாரிசு, நண்பருக்குத் தெரிந்தவர் என்ற அடிப்படையில் ஆட்களைத் தேர்வு செய்வது கூடவே கூடாது. தொழிலுக்கு முதல் எதிரியே இந்த சிபாரிசுப்படி ஆட்களை நியமிப்பதுதான். அவர்களை முழுமையாக வேலை வாங்கமுடியாமல் சிபாரிசு தடுக்கும்.அதே பொருத்தமான உறவினர்கள் வீட்டில் இருந்தால், அவர்களைப் பயன்படுத்தலாம். இது நமது பிஸினஸ் என்பதால், அவர்கள் அக்கறையோடு எல்லா வேலைகளையும் எடுத்துப் போட்டுச் செய்வார்கள். வேகமான வளர்ச்சிக்கு அது உதவும்.

70.வாடிக்கையாளர்கள் பார்வையில் சிந்தித்தல்…

எப்போதும் வாடிக்கையாளர் பார்வையில் பிஸினஸை சிந்தியுங்கள்.  நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு என்ன கொடுக்க விரும்புகிறீர்கள் என்பதைவிட வாடிக்கையாளர்கள் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க் கிறார்கள் என்பதே முக்கியம்.

No comments:
Write comments

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension