Sunday, June 12, 2016

WHEN START A BUSINESS PART- 6 Dos and Don’ts of Business- தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி – 6

 

தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி – 6

51.தேவை என்ன என்பதை அறிந்து செயல்படுங்கள்..

உங்கள் தொழிலிலுக்கு என்ன தேவை,உங்கள் வாடிக்கையாள்ர்க்ளுக்கு என்ன தேவை,உங்களின் பணியாளர்க்ளுக்கு தேவை என்ன என்பதை அறிந்து செயல்படுங்கள்..

52.ஏழு தலைமுறைக்கும் முதலாளியாய் இரு., கடனாளியாகதே…

எந்த ஒரு விசயத்திலும் கடன் இல்லாமல் இருக்கவே முடியாது. ஆனால் வாழ்க்கை முழுவதும் கடனாளியாய் இருப்பது தொழில் முனைவோருக்கு அழகல்ல.

53.நிபுணராக இருக்க தேவையில்லை…
 
எந்த ஒரு விசயத்திற்க்கும் நிபுணராக அவசியமே இல்லை… அந்த விசயத்தை பற்றிய அடிப்படை மற்றும் கற்று கொள்ளும் ஆர்வம் இருந்தலே போது உங்கள் தொழிலிலை கண்டிப்பாக உய்ர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.

54.பயிற்சியும், முயற்சியும்…

பயிற்சியும், முயற்சியும் தான் உங்கள் தொழில் வாழ்க்கையை நிர்ணயிக்கும். எந்த தொழிலாக இருந்தாலும் சரி அது உங்களுக்கு தினமும் ஒரு பாடத்தை கற்று தரும்.

55.எல்லாம் சரியா இருக்கனும்…

சரியான பொருள் அல்லது சேவையை(Product or service), சரியான இடத்தில்(place), சரியான நேரத்தில்(time), சரியான விலைக்குக்(Price) கிடைக்கச் செய்வது தான் பிசின்ஸில் ஒரு சிக்கலான ஒன்று அதை சரியாக செய்தால் சக்சஸ் தான்.

56.80/20 விதி உங்கள் தலைவிதி…

நமது நிறுவனத்தின் மொத்த வருவாயில் சற்றேறக்குறைய 80 சதவீதம்,  20 சதவீத வாடிக்கையாளர்கள் மூலமாகப் பெறப்படுகிறது.80/20 விதியை நம்பிப் பயன்படுத்துங்கள்.அப்போது தான் நீங்கள் வாடிக்கையாளர் விசுவசத்தை (CUSTOMER LOYALITIY) பெறமுடியும்.

57.ரகசியம் உங்களிடம் மட்டும்…

தொழிலிலை பற்றிய எந்த ஒரு விசயமாக இருந்தாலும் சரி அது உங்களுக்கும் உங்கள் தொழில் துனைவருக்கும் மட்டுமே தவிர வேறு யாருக்கும் தெரியாதிருப்பது நல்லது.

58.நிர்வாக திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்…

தொழிலிலுக்கு மிக முக்கியமான ஒன்று தான் நிர்வாகம் இது இல்லை என்றால் உங்கள் தொழில் உங்களுக்கே ஆப்பு வைத்துவிடும்.

59.பணியாளரும் தூண்களே…

ஒரு சரியான பணியாளரை சரியான வேலைக்கு அமர்த்துவது தான் தொழிலில் மிக ரிஸ்க்கான வேலை. அதை சரியாக செய்தாலே நீங்கள் வெற்றியை நோக்கி பயணிக்க போகிறீர்கள். என்று அர்த்தம்.

60.மார்கெட்டிங் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்…

மார்கெட்டிங் என்பது விற்பனை தான் என்று நினைகிறீர்கள் என்றால் அது முற்றிலும் தவறு. எனவே மார்கெட்டிங் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்…

அடுத்த 10 அடுத்த பகுதியில்….

No comments:
Write comments

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension