Sunday, June 12, 2016

வாரம் ஒரு வணிக வித்தகர் - மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் தலைவர் திரு.சதிஸ்குமார்

 

வாரம் ஒரு வணிக வித்தகர்(பெரிய ஜாம்பவாங்களின் சின்ன அனுபவங்கள்) 

இந்த வாரம் நாம் பார்க்கபோகும் ஜாம்பவான் ஒரு சாதாரண விவசாய பின்புலத்தை உடைய இவர் இன்று ஒரு பெரிய தொழிலதிபராக உருவெடுத்திருகிறார் அவர்தான் மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் தலைவர் திரு.சதிஸ்குமார் அவர்கள்

இவருடைய வெற்றிக்கு காரணம் அவருடைய மாற்று சிந்தனையும் நம்பிக்கையும் தான்.
வெறும் 8வதுவுடன் பள்ளிக்கல்வியை நிறுத்தி விட்டு தொழில் செய்ய தயாரானார். ஆனால் அவர் தான் பூர்விக தொழிலான விவசாயத்தை தேர்ந்தெடுக்கவில்லை , அதற்கு பதிலாக தன் தந்தை நடத்தி கொண்டிருந்த பால் பண்ணை தொழிலில் இறங்கினார்.

அப்போது பெங்களுருவை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் இவரிடம் அதிக அளவில் பாலை கொள்முதல் செய்து கொண்டுபோவார். இவருகோ ஒரே சந்தேகம் இவ்வளவு பாலை கொள்முதல் செய்து என்னத்தான் செய்கிறார்கள் என்று உடனே அந்த வாடிக்கையாளருடன் பெங்களுரு சென்றார்.

அங்கு அவர் கண்ட காட்சி தான் இன்று அவர் இந்த நிலைக்கு வர காரணம். அவரிடம் கொள்முதல் செய்த பாலை பனீராக செய்து அங்கே உள்ள ஹோட்டல்களில் விற்பனை செய்வதை கண்டார். அவர்களிடம் பாலை பனீராக எப்ப்டி செய்கிறீர்கள் என கேட்டார். அவர்களோ அதை சொல்ல மறுத்து விட்டனர். அதே சிந்தனையோடு திரும்பிய அவர் மனம் தளராமல் பாலை பனீராக மாற்றுவதை தான் முயற்சியால் கற்று கொண்டு மட்டுமல்லாமல் தான் பால் பண்னையிலிருந்து 300 லிட்டர் பாலை பனீராக மாற்றி ஹோட்டல்களில் விற்பனை செய்தார். ஒரளவுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. அடுத்து ஹோட்டல் அதிபர்களின் கருத்துக்களுக்கு ஏற்ப பனீரை பேக்கிங்களில் போட ஆரம்பித்தார். அடுத்த கட்டமாக தனது  பொருளுக்கு ஒரு ப்ராண்ட் நேம் வைக்க எண்ணி இணைத்தில் தேடி மில்கி மிஸ்ட் என்ற பெயர் வைத்ததாக ஒரு பேட்டி சொல்லியது போல் நியாபகம்.

இவர் செய்யத மார்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர் சேவை தான் மிக முக்கியமான ஒன்று. தன்னுடைய வாடிக்கையாளர் தனது பொருளை வாங்கும் போதும் ப்ரெஷாக இருப்பதை உணர வேண்டும் என்பதற்காக தன்னுடைய டீலர்கள் மற்றும் அவருடைய ப்ராடெக்ட்களை வாங்கிவிற்கும் சில கடைகளுக்கு ஃப்ரிட்ஜ் வாங்கி கொடுத்து ஊக்குவித்தார். ஆனால் சிறிது நாட்களில் தொழிலில் சுணக்கம் ஏற்பட்டது. இதற்கு காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள அவர் தன் டீலர்கள் நிலையத்திற்க்கு சென்ற போது அதிர்ச்சி அடைந்தார் என்னவென்றால் தன் ப்ராடெக்ட் இருக்க வேண்டிய ஃப்ரிட்ஜில் மற்ற ப்ராடெக்ட்கள் அதிகமாக இருந்தது.

இவ்வாறு செய்தது ஏன்? என கேட்டார். அதற்கு டீலர்கள் சார் பனீர்லாம் எப்பயாவது தான் வாங்குவாங்க.. ஆனால் மத்த பொருள் எல்லாம் அதிகம் சேல்ஸ் ஆகுறதால அத முன்னாடிவச்சிருக்கேனு சொன்னதும் போது அவருடைய சிந்தனையில் ஏன் நாமும் மக்கள் அடிக்கடி வாங்குகிற பொருட்களை தயாரிக்ககூடாது? என ஓடியது.உடனே தனது அடுத்தடுத்த தயிர்,நெய் போன்ற ப்ராடெக்டக்ளை தயாரிக்க ஆர்ம்பித்தார்.


ஆரம்பத்தில் வருடத்திற்க்கு 10 கோடிகள் வருமானம் ஈட்டிய மில்கி மிஸ்ட் தற்போது 290 கோடிகளுக்கு மேல் வருமானம் ஈட்டுகிறது. முயற்சியும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும்,தன்னம்பிக்கையும் இருந்தால் முன்னேரலாம் என்பதற்க்கு திரு.சதிஸ்குமார் ஒரு எடுத்துகாட்டு.

MILKY MIST OFFICIAL SITE : http://www.milkymist.in/

No comments:
Write comments

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension