Sunday, May 29, 2016

வாரம் ஒரு வணிக வித்தகர்-கெவின்கேர் நிர்வாக இயக்குநர் திரு சி.கே.ரெங்கநாதன் பேசுகிறார்

 

கெவின்கேர் நிர்வாக இயக்குநர் திரு சி.கே.ரெங்கநாதன் பேசுகிறார்
இன்னைக்கு கெவின்கேர் நிர்வாக இயக்குநரா என்னை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கலாம். ஆனா, இந்த இடத்தை எட்டிப்பிடிக்க மேற்கொண்ட பயணம் எவ்வளவு சிரமமாகவும் அதே சமயம் சுவாரஸ்யமாகவும் இருந்தது தெரியுமா? அந்தப் பயணத்தின் அனுபவங்கள் என் ஆளுமைத்திறனை எந்த அளவுக்கு உயர்த்தியதுனு உங்களோட பகிர்ந்துக்க ஆசை!
எந்த ஒரு விஷயத்தையும் பாசிட்டிவா யோசிச்சா, அதன் பவர் ரொம்பப் பெருசு. இதைத்தான் 'பவர் ஆஃப் பாசிட்டிவ் திங்கிங்’னு சொல்வாங்க. நான் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவனா இருந்தப்போ, என் அப்பா இறந்துட்டார். ஒட்டுமொத்தக் குடும்பப் பாரமும் என் மேல விழுந்தது. அதுவரை வாழ்க்கையில் எந்தத் திட்டமும் இல்லாமத் திரிஞ்சுட்டு இருந்த நான், அதுக்குப் பிறகு யோசிச்சது எல்லாமே பாசிட்டிவாகத்தான். அந்தச் சிந்தனைகளின் விதை என்ன தெரியுமா?
நான் ஷாம்பு தயாரிக்கும் நிறுவனம் ஆரம்பிச்ச புதுசு... அப்போ மார்க்கெட்ல பிரபலமா இருந்த சில ஷாம்புக்களைப் போலவே டிசைன், பேர் எல்லாம் வெச்சு என் ஷாம்புவையும் வித்தேன். அதைக் கண்டுபிச்ச ஒரு கடைக்காரர் என்கிட்ட சொன்ன ஒரு விஷயம் கன்னத்தில் அறைஞ்ச மாதிரி இருந்தது. அதுக்குப் பிறகு என் தயாரிப்பில் நான் மேற்கொண்ட வித்தியாசங்கள்தான் எனக்குனு ஒரு தனிப்பட்ட அடையாளம் கொடுத்தது. 'நீ வித்தியாசப்படுத்து. இல்லையென்றால், மடிந்துபோவாய்’னு நான் வாசிச்ச ஒரு வரி இப்பவும் என்னைச் செலுத்திட்டு இருக்கு. நம் ஒவ்வொருவருக்குமே அந்த வித்தியாசப்படுத்துதல் அவசியம். அதை என் அனுபவம் முலமாகவே விளக்குறேன்.
'இருக்கிறதை விட்டுட்டுப் பறக்கிறதுக்கு ஆசைப்படாதே’, 'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ - நானும் இப்படி எல்லாம் நினைச்சுட்டு அமைதியா இருந்தவன்தான். ஆனா, நான் வாசிச்ச ஒரு ஆங்கிலப் புத்தகம் என் மனநிலையை மொத்தமா மாத்தியது. 'முடியுமோ... முடியாதோ எதையும் பெரிசா யோசிக்கணும்’ - இதுதான் அந்தப் புத்தகம் அடிப்படையா சொல்லிக்கொடுத்த ஒரு பாடம். அதுக்கப்புறம் இப்போ வரை நான் அப்படித்தான் சிந்திக்கிறேன். செயல்படுறேன். அந்தப் புத்தகம் எனக்குள் உண்டாக்கிய மாற்றங்கள்பத்தி இன்னும் சில விஷயங்களைப் பகிர்ந்துக்கவா?
அலுவலகமோ, வீடோ நாம் திட்டமிட்ட விஷயங்கள் என்னவெல்லாம் நடக்கும், எப்படியெல்லாம் நடக்கும்னு நாம முன்னாடியே காட்சிப்படுத்திப் பார்க்கணும். அதுதான் நம்ம வெற்றிக்குப் பெரிய உந்துகோலா இருக்கும். நான் முன்னாடி சைக்கிள்ல போய் வியாபாரம் பண்றப்போ, தினமும் ஒரு கனவு காணுவேன். அது வெறியா மாறி, நிஜமாவும் நடந்துச்சு. நம்ம கனவு எப்படிப்பட்டதா இருக்கணும், அதை நிஜமாக்க என்ன செய்யணும்... இதை எளிமையா புரியவைக்க ஆச்சர்யமான ஒரு கதை இருக்கு!
அதுவும் பேசலாம்... அதைத் தாண்டியும் பேசலாம்! 28.3.2013 முதல் 3.4.2013 வரை 044 - 66802911 * எண்ணில் என்னை அழையுங்கள். உற்சாகம் உத்வேகம் பகிர்ந்துக்கலாம்!
அன்புடன்,
சி.கே.ரெங்கநாதன்.
Credits to : Vikadan

No comments:
Write comments

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension