Sunday, May 29, 2016

WHEN START A BUSINESS PART- 5 Dos and Don'ts of Business- தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி - 5

 

தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி - 5

41.1:5 விகித்தை follow பண்ணுங்க....

ஒருவரைப் பணியில் அமர்த்தும் போது அவரால் 1:5 என்ற விகிதத்தில் தொழிலுக்கு வர்த்தகம் வந்து சேரவேண்டும். அதாவது, ஒருவருக்கு ஒருபங்கு சம்பளம் வழங்கினால், அவரால் தொழிலுக்கு 5. பங்கு வர்த்தகம் வந்து சேரவேண்டும். இது தவறும்போது தொழிலில் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, சேவைத் துறையில் இந்த 1:5 விகிதம் கட்டாயம் இருக்க வேண்டும்.

42.மார்கெட்டிங்கில் scares ஐ பயன்படுத்துங்கள்...

scares என்பது மார்கெட்டிங் யுக்தியாகும்.ஒரு பொருளை விற்பதற்கு மக்களிடம் பயத்தை ஏற்ப்படுத்துதல். "எங்களிடம் குறைவான stock களே உள்ளன. வாங்குவதற்க்கு இன்றே முந்துங்கள்" என்று விளம்பரங்களை பார்திருப்பீர்கள் அது தான் இந்த scares.

43.மார்கெட்டிங் Updation ரொம்ப முக்கியம்...

மார்க்கெட் பற்றிய ஆராய்ச்சியும், துறை சார்ந்த அறிவும் அவசியம் தேவை. இல்லையெனில் சரியான நேரத்தில், சரியான வாடிக்கையாளரை சென்றடைய முடியாமல் போய்விடும். மார்க்கெட் ஆராய்ச்சியும், துறை சார்ந்த அறிவும் இருந்தால்தான் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதையும் கணிக்க முடியும்.

44.டிஜிட்டல் மார்கெட்டிங் பண்ண ஆரம்பியுங்கள்...

இன்றைய கால கட்டத்தில் ஆன்லைன் மார்கெட்டிங் ஒரு பிசின்ஸ்க்கு ரொம்ப முக்கியமான ஒன்னு. இதை பற்றி நான் சொல்ல தேவை இல்லை. google,Facebook,twitter,Linkedin,என டிஜிட்டல் மார்கெட்டிங் பண்ண ஆரம்பியுங்கள், இதற்கு செலவு பண்ணவும் தயாராக இருங்கள்...

45.பொறுமையும்,காத்திருப்பும் மிக முக்கியம்.

உங்க பிசின்ஸ் சூடு பிடிக்கும் வரை பொறுமையுடன் காத்திருங்கள். ஏனென்றால் விதை விதைத்த உடன் மரம் வளராது....

46.உங்களுக்கு உதாரணம் நீங்கள் தான்..

உங்கள் யாரும் உதாரணம் தேவை இல்லை உங்களுக்கு உதாரணம் நீங்கள் தான்.. ஏனென்றால் ஒரு விசயத்தில் தவறு செய்து மாட்டிக் கொள்வதும் நீங்கள் தான், சரியாக செய்து நிம்மதி இருப்பதும் நீங்கள் தான்.

47.தொழிலை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்து செல்லுங்கள்...

என் செலவு போக என்னிடம் பணம் வரவு இருக்கிறது என்பவர்கள் உங்கள் பிசின்ஸ்க்கு புதுமையான விசயத்தை செய்ய ஆரம்பியுங்கள்... 

48.உங்கள் எண்ணம் போல் தான் உங்கள் பிசினஸ்...

நீங்கள் நேர்மறையானவர் எனில் உங்களுக்கு உங்கள் பிசினஸ் plus இல்லையென்றால் minus தான்.

49.Cheating தான் பிசினஸ்

இந்த உலகத்தில் உள்ள அனைவருமே ஏமாற்றுபவர்கள் தான் ஒரு சில விசயத்தில் ஏமாளிகள் தான் என்பதை அறிந்து பிசின்ஸை செய்யுங்கள்...

50.தலைமை பண்பை வளர்த்துக்கொள்ளுங்கள்..

உங்களின் பேச்சு, உடை, பழகும் விதம், இதுவே நீங்கள் எப்படி.. உங்கள் பிசினஸ் எப்படி என்பதை காட்டி கொடுத்துவிடும். 

No comments:
Write comments

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension