Friday, May 27, 2016

WHEN START A BUSINESS PART- 4 Dos and Don'ts of Business- தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி - 4

 


தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி - 4

31.விமர்சனத்திற்கு தயாராய் இருங்கள்...

உழைப்பினால் நாம் களைப்படைவதை விட பிறரது விமர்சனங்களால்தான் அதிகம் நொறுங்கிப் போகிறோம். ஓர் ஆழமான உண்மை என்னவெற்றால், பாராட்டைப் பிறரிடமிருந்து எதிர்பார்க்கும் பலவீனம் நம்மிடம் உள்ளதனால்தான் விமர்சனங்களால் நாம் துவண்டுபோகிறோம்.பிறரது அபிப்ராயங்கள், கேலி, அவமானம், கிண்டல், தாக்குதல், விமர்சனம் போன்றவை பல நேரங்களில் நாம் சந்திக்கவேண்டிவரும். அதற்காக எந்த விமர்சனத்திற்காவும் நமது குறிக்கோளிலிருந்து பின்வாங்கக் கூடாது. அதை நமது உயர்விற்கு உந்துதலாக்கி கொள்ளவேண்டும்.

32.Competitor களை பார்த்து பயபடாதீங்க...

பெரும்பாலும் நாம் நம்மை விட வலுவானவர்களையும், பேராற்றல் உள்ளவர்களையும், திறமையானவர்களையும் பார்த்து நமது தைரியத்தை இழந்துவிடுகிறோம்.நம்மை விட பேராற்றல் வாய்ந்தவர்களை பார்த்து ஒருபோதும் அஞ்சகூடாது. அவர்களை பார்த்து நமது தைரியத்தை ஒருபோதும் இழக்ககூடாது.

33.தோல்விகளை சந்திக்கவேண்டியது வரும்.

நீங்கள் வெற்றி அடைவதற்கு நீண்ட காலம் ஆகலாம். வெற்றிகள் பெரும்பாலும் பல தோல்விகளுக்கு பிறகே கிடைக்கும். நாம் வெற்றி மற்றும் தோல்வி இரண்டுக்குமே நம்மை தயார் படுத்திக்கொள்ளவேண்டும்.

34.தொழிலை விட்டு  வெளியேற தோன்றும்..

எல்லாம் நமக்கு சாதகமாக சென்றுகொண்டிருக்கும் போது நமக்கு நேர்மறை எண்ணங்களே ஆக்கிரமித்திருக்கும். ஆனால் எதிர்மறையாக செல்லும் பட்சத்தில் பெரும்பாலான தொழில்முனைவோருக்கு அதிலிருந்து வெளியேறும்  எண்ணமே தோன்றும். வெளியேறும் எண்ணம் உள்ளவர்கள் தொழிலில் வெற்றி அடைந்ததில்லை. எந்த நிலையிலும் விடாமல் முயற்சி செய்தவர்களே விஸ்வருப வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

35.மத்தவங்ககிட்ட இருந்து நிறைய கத்துகோ..

     நமக்கு தெரியத ஒரு விசயத்த யாரா இருந்தாலும் சரி அவங்க கிட இருந்து கத்துகோங்க.. ஒரு சின்ன விசயம் தான் விடாதிங்க.

36.கனவு காணுங்கள்:

நம்ம ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் ஐயா சொன்னது கண்டிப்பா உங்களுக்கு தெரியும். நான் சொல்லனும்னு அவசியம். இல்லை.

37.குறுக்கு வழி ஒன்றும் இல்லை...

தொழிலில் மட்டுமல்ல எந்த ஒரு விசயத்துயும் சரி வெற்றி பெறுவதற்கு குறுக்கு வழி ஒன்றும்  இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

38.செய்த தவறுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்....

இது என்னால் தான் நடந்தது என்று செய்த தவறுகளை ஏற்றுக்கொள்ளுகங்கள். அப்போது தான் உங்களுக்கு தவறை திருத்தி கொள்ள முடியும்.

39.கட்டமைப்புகளை உருவாக்குங்கள்.

நான் ஆரம்பிக்கின்ற தொழில் இப்படி தான் இருக்கனும்.மதிப்பை உருவாக்குதல், புதுமைமை புகுத்துதல்,  கலாசாரத்தை உருவாக்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்.

40.எதற்கும் திருப்தி அடையாதிங்க..

உங்க தொழிலில் எவ்வளவு வருமானம் வந்தாலும் சரி. இது எனக்கு போதாது என்று நினையுங்கள்.

No comments:
Write comments

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension