Tuesday, May 24, 2016

WHEN START A BUSINESS PART-1Dos and Don'ts of Business- தொழிலில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை 100 குறிப்புகள் பகுதி - 1

 

            எனக்கு வேலை வேண்டாம் நான் யாரிடமும் கைகட்டி நிற்க விரும்பவில்லை...!ஒரு தொழில் செய்து அதில் இருந்து கிடைக்கும் பணம் இருக்கிறதே. அந்தச் சுகமே தனிதான் என்று வேலையை விடுத்து சொந்தமாகதொழில் தொடங்குபவர்கள் கண்டிப்பாக இதை படிக்க வேண்டும்.



   சொந்தமாகதொழில் தொடங்க வேண்டும் என்றுஆசை இருக்கிறது. தன்னம்பிக்கை இருக்கிறது, திட்டங்கள் இருக்கின்றன.  ஆனால், என்னை நம்பி யார் பணம் தருவார்கள்? முறைப்படி ஒரு தொழிலை எப்படித் தொடங்குவது? அதை எப்படி அங்கீகாரப்படுத்துவது? இப்படி நிறையக் குழப்பங்கள்தான் நம் கனவுக்கு முட்டுக்கட்டை போட்டு, கிடைத்த ஏதாவது ஒரு வேலை பார்த்தால் போதும் என்ற மனநிலை நமக்கு வந்துவிடுகிறது.  உங்களுக்கு இருக்கும் சின்னச் சின்ன சந்தேகங்களுக்காக உங்களுடைய கனவை மூட்டைக்கட்டிப் போடலாமா? வாருங்கள்… உங்கள் சந்தேகத்தை நாங்கள் களைகிறோம்

1.உங்களையும் குடும்பத்தையும் சேஃப்ட்டி பண்ணிகோங்க..

வேலையை விடுக்கின்ற போது, , உங்களுக்கான மாதந்திர  வருமானம் நின்றுபோகும். இதனால் உங்கள் வீட்டுச் செலவு, பிள்ளைகளின் படிப்பு செலவு,வீட்டுக்கடன்  போன்றவற்றைச் சமாளிக்க குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது பணம் தேவை. இந்த தொகையை ஏற்பட்டு செய்து கொண்டு தொழிலில் இறங்க வேண்டும்.

2.ஆரம்ப முதலீடுகளுக்கு....

இதுமட்டுமில்லாமல, கூடுதலாக இரண்டு வகையான முதலீடுகளுக்கும்(Capital)  உங்களுக்கு பணம் தேவைப்படும் . ஒன்று , தொழில் தொடங்குவதற்காக 

நிரந்திர முதலீடு(Fixed Capital) :


உங்க தொழிலுக்கு நீங்கள் செய்ய வேண்டிய முதல் கடமை.

  1. அலுவலக வாடகை முன்பணம்(Office advance) , 
  2. எந்திரங்கள்(Machinery), கணினி(Computer) போன்ற மின் மற்றும்  மின்னணு சாதனங்கள்(Electric & Electronics Goods), 
  3. மேசை-நாற்காலிகள்(Furniture’s) , 
  4. வாகனம்(Vehicles).


நடைமுறை மூலதனம்(Working Capital):

உங்க தொழிலுக்கு நீங்கள் செய்ய வேண்டிய இரண்டாவது கடமை.

  1. வாடகை(Rent) ,  
  2. ஊழியர் சம்பளம்(Salaries), 
  3. மின் மற்றும் தொலைபேசி கட்டணம்(Electric & Telephone Charges),
  4. பயணச் செலவு (Travel Expenditures), 
  5. விளம்பர செலவு(Advertisement Cost),
  6. பொருள் கொள்முதல்(Raw Material Cost). 


இந்த இரண்டு தேவைகளுக்கும் பணம் இருந்தால் மட்டுமே நீங்கள் தொழில் தொடங்க வேண்டும். 

3.தொழிலுக்கு அஸ்திவரத்தை முன்னாடியே பண்ணுங்க...

தொழில் தொடங்க விரும்புவோர் வேலையில் இருந்து கொண்டே அதற்கான ஆரம்ப கட்ட பணிகளை முடித்துவிட வேண்டும். அதாவது தொழிலுக்கான  
  1. Project Report தயாரித்தல், 
  2. இடத்தை தேர்வு செய்தல் , 
  3. TIN(Tax-Payer Identification Number), 
  4. VAT(Value Added Tax Registration),
  5. PAN (Permanent Account Number),
  6. CST (Central sales Tax ), 
  7. IEC (Import & Export Code),
  8. Company Registration 
  9. தொழிலுக்கு தேவைப்படும் அரசு அனுமதிகளை ( License ) பெறுதல் 
  10. வங்கி கணக்கு (Bank Account)  தொடங்குதல், 
  11. அலுவலக உள் மற்றும் வெளி அலங்கார வேலைகளை மேற்கொள்ளுதல் , 
  12. Business Card, Letter Pad, Brochure, Palm let  போன்றவற்றை   தயாரித்தல்,

உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டால்,  வருமானத்தில் கவனம் செலுத்தலாம்.

4.நேரத்த வீணாக்காதீங்க.....

வேலையை விடுத்தவுடன் வீணாக்குகிற   ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வருமான இழப்பாகும்  . அதுமட்டுமல்ல… அன்றிலிருந்தே தொழிலை நடத்துவதந்கான  செலவும் தொடங்கிவிடும்.

5.வாடிக்கையாளர்கள் தான் முக்கியம்...

எல்லாவற்றையும்விட , வாடிக்கையாளரையும்(Customers) கண்டறிந்து விட்டால் வேலை எளிதாகி விடும் . உங்களுடைய தொழிலில் , நீங்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டியது , வருமானம் தரக்கூடிய  வாடிக்கையாளர்களைத்தான்(Revenue Customers) மற்றும் வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள (Customer Retention) வேண்டியதிலும் தான்.

6.யூகித்து செயல் படு..

வருமான உத்தரவாதம் இல்லாதவரை , தொழில்முனைவர் தொழிலை தள்ளிப் போடுவது நல்லது.

7.உங்களை நீங்களே Marketing பண்ணிக்கோங்க...

தொழில் தொடங்குவதற்கு முன்பே நீங்கள் பலரிடம் தொழில் தொடங்கப் போகின்ற செய்தியைச் சொல்லி அதைப் பரவலாக்க வேண்டும் .அப்போதுதான் வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடிவருவார்கள். ஆனால் சொன்ன படி தொழிலை தொடங்குங்கள் இல்லையென்றால் ஆயிரம் வாய்கள் காத்துகொண்டிருக்கும்.செய்யும் தொழில் சரியாக செய்ய வேண்டும்..

8.ஒரு தொழில் ஒரே வருமானம்னு இருக்காதிங்க... 

உங்கள் தொழிலில்  பிற வருமானம் தரக்கூடிய ( Other Revenue Sources)  வழிகளை முடிந்தவரை அதிகரிக்கச் செய்யுங்கள் .

9.கணினிமயம் ஆகுகிற வரை நீங்கள் கணினியாக இருங்க...

கல்லாவில் பணம் புழங்குகிற தொழிலாக  இருந்தால் ,தொழிலை கணினிமயம் ஆக்குகிற வரை நீங்கள்தான் கல்லாவில் அமரவேண்டும்.

10. Plan A இல்லனா Plan B, Plan B இல்லனா Plan C....

தொழிலை தொடங்கத் திட்டமிடுகிறபோது, நீங்கள் உருவாக்குகிற திட்டம் இழப்பைத் தருமானால், அடுத்து மாற்று வழி ( Alternative Planning) என்ன என்பதையும்  முன்கூட்டியே திட்டமிட வேண்டும் .

அடுத்த 10 நாளைக்கி தான்...

No comments:
Write comments

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension