Sunday, May 22, 2016

இந்த வார ஸ்பெஷ்சல்- Fear management

 

பய மேலாண்மை (Fear Management),

"பயமிருந்தால் சிலந்தியும் உன்னை சிறைபிடிக்கும்." என்ன ஒரு அற்புதமான வரி.

                  பயம் தான் மனிதனுக்கு ஒரு பெரிய குறை. ஆனால் பயப்படுரவங்க கண்டிப்பா சொல்லுறேன் அவங்க வாழ்க்கை எந்த ஒரு சாதனையும் பண்ண மாட்டங்க. ஏன்னா இவங்களுக்கு பிறவி வாழ்க்கை முடிக்குறதே ஒரு மிக பெரிய சாதனை தான். இவங்களுக்கு கண்டிப்பா பிசின்ஸ் ஒத்து வராது.கடைசி வரை பயத்தோடயே வாழ்க்கைய முடிக்க வேண்டியதுதான். ஒரு நல்ல மன ஆற்றல் உள்ள மனிதனுக்கு பயமிருந்தால் இரண்டே விசயம் தான் ஒன்னு தன் குடும்பம் இன்னொன்று கடவுள். ஒரு உதாரணத்துக்கு மன ஆற்றல் உள்ள என் நண்பன் ஒரு அமைதியான் இடத்துல 10 பேரு முன்னாடி பாட்டு பாடுரது, தான் என்ன செய்யனும்னு நினைக்குறானோ அத செய்வான். ஒரு தொழில் செய்யுற யாரயெடுத்துகிட்டாலும் சரி இந்த பழக்கம் இருக்கும் 10 பேரு முன்னாடி பாட்டு பாடுரத சொல்லல,தான் என்ன செய்யனும்னு நினைக்குறாங்களோ அத செய்வாங்க மத்தவங்கள பத்தி யோசிக்க மாட்டங்க.அதே போல ஒரு பிரச்சனை வந்துட்டா அத எப்படி சால்வ் பண்ணுரதுனு யோசிக்கனுமே தவிர அத பார்த்து பயப்பட கூடாது. 

                               ஒரு ஆறு மாததிற்கு முன்பு எனக்கு என் நண்பர்களால் ஒரு பிரச்சனை வந்தது அத நான் சால்வ் பண்ணுரதுனு யோசிக்காம அதுல இருந்து எப்படி விலகுரதுனு விலகிகிட்டே தான் இருந்தேன். அதுக்கு தீர்வை என் இன்னோரு நண்பனால் கிடைத்தது. அவன் சொன்ன விசயம் இது தான்."டேய் நீ ஒவ்வொரு விசயத்துக்கும் பயப்படுறடா அதான் உனக்கு பிரச்சனை மேல் பிரச்சனை தைரியமா போய் அவனுக கிட்ட பேசு பிரச்சனை சால்வ் ஆகிடும், அவனுக தொல்லையும் உனக்கு இருக்காதுனு". அவன் சொன்ன மாதிரியே போய் பேசினேன். இனிக்கு எனக்கு அந்த பிரச்சனை ஓரளவுக்கு சால்வ் ஆகிடுச்சு. அதனால எத பார்த்தும் பயப்படதிங்க...

ஒவ்வொரு பிரச்சனைகளும் நமக்கு வாய்ப்புகளே...! அதனால பிரச்சனைகளை சால்வ் பண்ணி வாய்ப்புகளை யூஸ் பண்ணுங்க....பண்ண கற்று கொள்ளுங்கள்....

 எத பார்த்துனுனா பயப்படுராங்க

பேச கூச்ச படுறது,பயப்படுரது?
மத்தவங்க என்ன சொல்லுவங்கனு
இத என்னால் முடியுமா..?
தப்பா பண்ணுணா?
இத நான் கரெக்டா பண்ணிணேனா?
நான் பண்ணி எதும் பிரச்சனை ஆகிட்டா?

இவங்க மனசுப்பூரா நிறைய 
மனக்குழப்பமும் 
நெகட்டிவ் எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS) அதிகமாத்தான் இருக்கும். 

பிசின்ஸ் செய்யுற ஒருத்தர பத்தி 1000 பேர் வித விதமாகதான் பேசுவாங்க அதெல்லாம் லெஃப்ட் காதுல வாங்கி ரைட் காது வழிய விட்டுடனும். இத என்னால் முடியுமா..? தப்பா பண்ணுணா? இத நான் கரெக்டா பண்ணிணேனா? நான் பண்ணி எதும் பிரச்சனை ஆகிட்டா? இவங்க மனசுப்பூரா நிறைய நெகட்டிவ் எண்ணங்கள்(NEGATIVE THOUGHTS) தான் இருக்கும். என்னால முடியும்,நான் கரெக்டா பண்ணிருகேன், பிரச்சனை வந்த பார்த்துகலாம்,சமாளிச்சுடலாம்குற பாசிட்டிவ் எண்ணங்களை (POSITIVE THOUGHTS) மனசுகுல்ல விதைத்தால் மட்டுமே முடியும். அதுக்கு நம்மல முதல்ல முழுமையாக நம்பனும். 

இடி இடிச்ச உடனே பயப்படுறவங்க ஆலம் பத்து அர்ஜுனம் பத்து சொல்லுறங்களே அது போல தான்.. என்னால முடியும்,நான் கரெக்டா பண்ணிருகேன், பிரச்சனை வந்த பார்த்துகலாம், சமாளிச்சுடலாம்குற பாசிட்டிவ் எண்ணங்களை மனசுகுல்ல சொல்லிகிட்டே இருங்க...

என்னால் முடியும் என்பது நம்பிக்கை,
என்னால் மட்டும் முடியும் என்பது தன்னம்பிக்கை...

இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் நம்பிக்கை நிறைந்தவரா? நீங்கள் தன்னம்பிக்கை நிறைந்தவரா?

அடுத்த வாரமும் தொடரும்....

No comments:
Write comments

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension